Siddha Remedies : நரை முடி, புண், சரும நோய்க்கு தைலம்! ஆண்மை விருத்தி லேகியம்! வீட்டிலே தயாரிக்கும் சித்த முறைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Siddha Remedies : நரை முடி, புண், சரும நோய்க்கு தைலம்! ஆண்மை விருத்தி லேகியம்! வீட்டிலே தயாரிக்கும் சித்த முறைகள்!

Siddha Remedies : நரை முடி, புண், சரும நோய்க்கு தைலம்! ஆண்மை விருத்தி லேகியம்! வீட்டிலே தயாரிக்கும் சித்த முறைகள்!

Priyadarshini R HT Tamil
Aug 15, 2023 01:30 PM IST

இவற்றை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த முடியும். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எந்த பிரச்னையும் கட்டுக்கடங்காமல் சென்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

கரிசலாங்கண்ணி சாறு - 1 லிட்டர்

முடக்கத்தான் சாறு - 1 லிட்டர்

நெல்லிக்காய் சாறு - 1 லிட்டர்

வெள்ளாட்டுப் பால் அல்லது பசும்பால் – 2 லிட்டர்

நல்லெண்ணெய் – 2 லிட்டர்

அதிமதுரம், குன்றிமணி பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்து மேற்கண்ட சாற்றில் கலந்து ஒரே பதமாகக் காய்ச்சி 2 லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி தைல பதம் வந்த பின், இறக்கி ஆற வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

இதை நரைமுடி மாற தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும், உள்ளங்கையிலும் முடி வளரும். அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ள தைலம். நரைமுடி, செம்பட்டை முடி, வழுக்கை தலை, முடி உதிர்தல், பித்த நரை இவை அனைத்தும் தீரும்.

புழு வெட்டு தீர தைலம் -

• நல்லெண்ணெய் – 350 மி.லி

• வெள்ளெருக்கு பூ - 70 கிராம்

• மிளகு – 70 கிராம்

எண்ணெய் தவிர மற்றவைகளை இடித்து தூளாக்கி எண்ணெயில் போட்டு காய்ச்சவும். நீர்ச்சத்து சுண்டிய பிறகு வடித்து வைத்துக்கொண்டு தலைப் புழு வெட்டிற்கு இரவில் தடவி காலையில் சீயக்காய் தூள் போட்டு தலைக்கு தேய்த்து குளித்து வர புழுவெட்டு முற்றிலும் தீரும்.

மார்பின் அடிப்பகுதி, தொடை இடுக்கில் ஏற்படும் படை, புண்ணிற்கு தீர்வு தரும் மருந்து -

மாசிக்காய் எண்ணெய் எடுத்து இதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடியை வேண்டிய மட்டும் எடுத்து கலந்து இரவில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிக்கொண்டு படுத்து பின்னர் காலையில் குளித்து விடவும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர குணமாகும்.

மயிர் வேண்டாத இடத்தில் வளர்ந்தால் அதை நீக்க மருந்து - 

• அப்பிரகத்தூள்

• அரிதாரத்தூள் (அரிதாரம் )

• மனோசிலை தூள்

• சங்கு சுண்ணாம்பு

இவைகள் அளவுப்படி வேண்டிய மட்டும் எடுத்து மாதுளம் பழச்சாறுவிட்டு அரைத்து வெண்ணெய்போல் வந்த பின் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முடி வேண்டாத இடங்களில் காணப்பட்டால் இரவில் தடவி படுத்து பின்னர் காலையில் கழுவி விடவும். எரிச்சல் இருந்தால் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நீங்கும்.

தீச்சுட்ட புண், வெந்த புண் ஆற -

• மஞ்சள் 35 கிராம், எள்ளு 35 கிராம், வெண்ணெய் வேண்டிய அளவு எடுத்துக்கொண்டு மஞ்சளையும், எள்ளையும் ஊற வைத்து அரைத்து, பின் வெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு தீப்புண் மற்றும் இதர புண்களுக்கு போட விரைவில் ஆறும். புண்கள் ஆறும் வரை தொடர்ந்து செய்யவும்.

அக்கி மறைய -

• ஆவாரங்கொழுந்து

• அல்லி

ஒரே அளவு எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசி வர அக்கிப்புண் ஆறும். எரிச்சல் தீரும்.

காலில் காணும் கரப்பான் தீர -

முற்றின பூவரசம் மரத்தின் பட்டையை இடித்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தொடர்ந்து தடவி வர குணமாகும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்து -

சிற்றாமணக்கு இலையின் கொழுந்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத்தயிரில் கலந்து 3 நாள் காலை மாலை கொடுத்து வர மஞ்சள் காமாலை நோய் தீரும்.

படர் தாமரை, எச்சில் தழும்புகள் தீர -

நாகமல்லி இலையை எடுத்து எலுமிச்சம் பழச்சாறுவிட்டு அரைத்து பூசி வர விரைவில் இவைகள் தீரும்.

நாள்பட்ட ஆறாத புண்களுக்கு -

ஊமத்தை இலைச்சாற்றில் இரும்பையும், செம்பையும் அரைத்து தடவி வர ஆறாத புண்களும் ஆறிப்போகும். அனுபவம் கை கண்டது. மத்தன் தைலம் மிகச் சிறந்த மருந்து.

நரைமுடி மறைய -

மாசிக்காயை சுட்டு சமன் எடை தாசனப் பொடியை சேர்த்து அரைத்து தொடர்ந்து நரைமுடிக்கு பூசி வர மறையும்.

ஆஸ்துமாவிற்கு எளிய மருந்து -

கருப்பு வெற்றிலையுடன் 2 கிராம்பு வைத்து மடித்து மென்று சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க உடனே மூச்சு வாங்குதல் குறையும்.

குழந்தை வேண்டுமா செய்து பாருங்கள் -

நாட்டு இலந்தை இலை ஒரு பிடி, மிளகு 6, பூண்டு 6 இவைகளை சேர்த்து நன்றாக அரைத்து மாதிவிடாய் ஆன முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குழந்தைப்பேறு கிடைக்கும். தவறின் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் டர்ந்து சாப்பிடவும். கருப்பை சுத்தமாகி கருத்தரிக்கும்.

தாது / ஆண்மை வீரியத்துக்கு சிறந்த லேகியம் - 

ஆண்களின் தாது விருத்திக்கு ஜாதிக்காய் 35 கிராம், சாதிபத்திரி 35 கிராம், கிராம்பு 35 கிராம், ஏலக்காய் 35 கிராம், கோஷ்டம் 35 கிராம், வால் மிளகு 35 கிராம், கசகசா 35 கிராம், அதிமதுரம் 35 கிராம் எடுத்து இளம் வறுப்பாக வறுத்து தூள் செய்து வைத்துக்கொண்டு 1 லிட்டர் பசும்பாலை அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்துக்கொண்டு வேண்டிய அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சிக்கொண்டு பாகுபதம் வந்ததும் பொடியை சிறிது சிறிதாக தூவி கலந்துகொண்டு பின் நன்கு லேகிய பதம் வந்ததும் பசு நெய் கலந்து பக்குவப்படுத்தி காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்களின் தாது விருத்தி குறைபாடு தீரும்.

நீர்த்தாரை எரிச்சல்/கல்லடைப்புக்கு -

தலை வாழைத்தண்டை இடித்து பிழிந்து சாறு 250 மி.லி, பொரித்த படிகாரம் பற்பம் 200 மி.கி முதல் 500 மி.கி வரை எடுத்து கலந்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட்டு வர நாளடைவில் தீரும். சித்த மருத்துவம் பக்கவிளைவுகள் இல்லாதது, உடல் உறுப்புகளை சேதப்படுத்தாமல், நீக்காமல் நோயை மட்டுமே முற்றிலும் தீர்க்கக் கூடியது.

இவற்றை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த முடியும். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எந்த பிரச்னையும் கட்டுக்கடங்காமல் சென்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

டாக்டர். காமராஜ், மாவட்ட சித்த அலுவலர் (ஓய்வு), திருச்சி. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.