Tasty Seafood Recipe: சுவையான காரசாரமான இறால் நெய் ரோஸ்ட் செய்முறை
சுவையான காரசாரமான இறால் நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கடல் உணவுகள் மிகவும் சுவையானவை. அதனுடன் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும். இதில் இறால் சற்றே தித்திப்பு கலந்த சுவையாக இருக்கும். பிரஷ்ஷான இறாலின் சுவையே அலாதியாகும்.
செட்டிநாடு சமையலில் இறால் தொக்கு, இறால் வருவல், இறால் ஊறுகாய் என வகைவகையாக இடம் பெற்றிருக்கும்.
இறால் நெய் ரோஸ்ட் செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.
இறால் நெய் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்:
இறால் – அரை கிலோ
நெய் – கால் கப்
பெரிய வெங்காயம் – 1 (சிறிதாக வெட்டி வைக்கவும்)
காஷ்மீரி மிளகாய் – 5 (நல்ல மணம் & நிறம் கொடுக்கும், காரம் அதிகம் இருக்காது )
வரமிளகாய் – 4 அல்லது 5
காய்ந்த மல்லி – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 5 பெரிய பல்
எலுமிச்சைச்சாறு – 1 மேசைக் கரண்டி
தயிர் – கால் கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இந்துப்பு – தேவையான அளவு
இறால் நெய் ரோஸ்ட் செய்முறை:
மசாலாவுக்குத் தேவையான பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனியாக வறுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
முதலில் ஒரு கடாயில் இறால், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, இறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை ஓட்டி விட்டு (5 to 8 நிமிடம்) தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் கால் கப் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதங்கிய பின் அரைத்து வைத்த மசாலா மற்றும்
தயிர் சேர்த்து கலக்கி விட்டு மசாலா கலர் நிறம் டார்க் ஆக மாறும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் வதக்கவும். 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். .
அதன் பின் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் கழித்து வேக வைத்த இறாலை சேர்த்து கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 to 8 நிமிடம் நன்றாகப் பிரட்டி விட்டு சுண்டி ஆக வந்த பின் இறக்கி வைக்கவும்.
சுடச்சுட சாதத்துக்கு, இட்லிக்கு சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
டாபிக்ஸ்