‘சிரிக்க மட்டுமா சிந்திக்கவும்தான்’ இத படிச்சுட்டு படிக்கலாமா? படிக்க வேண்டாமான்னு முடிவெடுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘சிரிக்க மட்டுமா சிந்திக்கவும்தான்’ இத படிச்சுட்டு படிக்கலாமா? படிக்க வேண்டாமான்னு முடிவெடுங்க!

‘சிரிக்க மட்டுமா சிந்திக்கவும்தான்’ இத படிச்சுட்டு படிக்கலாமா? படிக்க வேண்டாமான்னு முடிவெடுங்க!

Priyadarshini R HT Tamil
Nov 22, 2024 11:53 AM IST

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ஜோக்கை படித்து மகிழ்ந்திருங்கள்.

‘சிரிக்க மட்டுமா சிந்திக்கவும்தான்’ இத படிச்சுட்டு படிக்கலாமா? படிக்க வேண்டாமான்னு முடிவெடுங்க!
‘சிரிக்க மட்டுமா சிந்திக்கவும்தான்’ இத படிச்சுட்டு படிக்கலாமா? படிக்க வேண்டாமான்னு முடிவெடுங்க!

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் வலம் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இங்கு உங்களுக்காக சிரிக்கவும், சிந்திக்கவும் இதோ இன்றை ஜோக் என்ன பாருங்கள்.

இன்றைய ஜோக்

விருந்தாளி – என்ன செய்ற?

பையன் – படிக்கிறேன்.

விருந்தாளி – படிச்சு என்னவாகப் போற?

பையன் – அதை பத்தித்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

விருந்தாளி – என்னன்னு?

பையன் - படிச்சுட்டு என்னாவா ஆகிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு?

விருந்தாளி – ஏன் குழப்பமா இருக்கு?

பையன் – ஒரு ஆசிரியரின் 10 வருட சம்பளம் ரூ.50 லட்சம்.

விருந்தாளி – அப்ப டீச்சராய்ட், மரியாதையான வேல.

பையள் – ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் ரூ.70 லட்சம்.

விருந்தாளி – அப்டியே அப்ப படிச்சு இன்ஜினியர் ஆயிடேன் கெத்தான ப்ரொஃபஷன். உங்க அம்மா, அப்பா எம்புள்ள இன்ஜினியர்னு பெருமையா சொல்லிக்கலாம்.

பையன் - டாக்டர் தொழில்ல பத்து வருட வருமானம் ரூ.250 லட்சம்

விருந்தாளி – அட இது நல்லாருக்கே. சொசைட்டில ரொம்ப அந்தஸ்தான வேலன்னா அது டாக்டர்தான். பேசாம படிச்சு டாக்டராய்டேன்.

பையன் - ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 300 லட்சமாம்.

விருந்தாளி – அப்ப வேற ஆப்ஷனே வேண்டாம். ஐஏஎஸ் ஆய்டு ஒரு டிப்பார்ட்மென்ட் இல்ல டிஸ்டிரிக்ட் உன் கைல, நிறைய சாதிக்கலாம். மேல சொன்ன எல்லாத்தையும் விட கெத்தான வேல.

பையன் - எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் ரூ.100 கோடியில் இருந்து ஆயிரம் கோடிகள் வரை.

விருந்தாளி – மயங்கி விழுகிறார்.

பையன் – அங்கிள் என்ன மயங்கீட்டிங்க இன்னும் சினிமா, மீடியான்னு ஏகப்பட்ட வேல இருக்கு அதான் எனக்கு குழப்பமா இருக்குன்னு சொன்னே அங்கிள்.

கருத்து

இதை படித்தவுடன் நிச்சயமாக சிரிப்பு வரும். ஆனால் இதை படித்துவிட்டு சிரித்துவிட்டு கடந்து விட மட்டும் முடியாது. நாம் சிந்திக்கவும் வேண்டும். இன்றைய கால கட்டத்தில் கல்வி மட்டுமல்ல அனைத்தும் வியாபாரமாகவும், எண்ணிக்கைகளாகவும் மாறிவிட்டது. கற்பது அறிவை வளர்க்க என்பது போய், கற்பது பணம் ஈட்ட மட்டுமின்றி, பெரும் பணம் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைப்பதாக உள்ளது என்பதைதான் இந்த ஜோக் காட்டுகிறது. இதை படித்து என்ன செய்ய முடிவெடுத்துள்ளீர்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.