Beauty Tips: இளமையாக இருக்க ஒரு வழி - சருமத்தைப் பொலிவாக்கும் சர்க்கரை ஸ்க்ரப்!
சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்க்ரப் செய்தால் மிகவும் பொலிவாக மாறிவிடும்.
மனிதனாகப் பிறந்த அனைவரும் தனது சரும அழகு பராமரிப்பில் அதிக அக்கறையோடும், கவனத்தோடும் இருப்பார்கள். அப்படியே சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விதமான எளிமையான வழிகள் உள்ளன.
அப்படி ஒரு எளிய வழியைத் தான் இங்கே காணப் போகிறோம். சர்க்கரையைக் கொண்டு சருமத்தைக் கவனித்துக் கொண்டால், சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் கரும்புள்ளிகள் உள்ளிட்டவற்றை அது எளிதில் அகற்றும்.
சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம், இல்லை என்றால் வேறு சில பொருட்களோடு கலந்து பயன்படுத்தலாம். சருமம் பட்டுப்போல மென்மையாக இருக்க நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சருமத்தை ஸ்கிரப் செய்தால் பொலிவுடன் சேர்த்து மென்மையாகி விடும்.
முதுமையை யாரும் விரும்புவதில்லை. அதற்காகவே சருமத்தை அக்கறையோடு அனைவரும் கவனித்துக் கொள்கின்றனர். சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்க்ரப் செய்யும் போது அதில் இருக்கக்கூடிய துளைகள் திறந்து அழுக்குகள் நீங்கிவிடும். சருமத்தில் இருக்கக்கூடிய நல்ல செல்கள் விரைவில் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளும்.
வெளியே எங்காவது அவசரமாகக் கிளம்பும் சூழ்நிலையில் சர்க்கரையைத் தண்ணீரில் கலந்து அதனை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஸ்க்ரப் செய்தால் சருமம் பொலிவாகிவிடும். ஈரமான துணியால் முகத்தைத் துடைத்து நீரில் கழிவினால் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.
பாதாம்
இரவு நேரத்தில் பாதாம் பருப்புகளை நீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதனை அரைத்து சிறிது சர்க்கரை, சிறிது பாதாம் ஆயில் அதில் கலந்து ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையைக் கொண்டு முகத்தில் ஸ்கிரப் செய்தால் சர்மம் மிகவும் பொலிவுடன் மாறிவிடும்.
கிரீன் டீ
ஆன்ட்டி ஏஜிங் என்ற தன்மை கிரீன் டீயில் அதிகம் உள்ளது. இது சருமத்தில் இருக்கக்கூடிய திசுக்களைப் பாதுகாக்கும். எனவே கிரீன் டீயில் சர்க்கரை சேர்த்துக் கலந்து சருமத்தில் தடவி ஸ்கிரப் செய்தால் அதில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி இளமையாக முகம் மாறும்.
தேங்காய் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை வைத்து முகத்தில் ஸ்கிரப் செய்தால் முகம் பொலிவாகிவிடும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்