River Cauvery : காவிரி விவகாரம் – அறிவியல் அறிக்கை கூறுவது என்ன?
River Cauvery : காவிரி விவகாரம் – அறிவியல் அறிக்கை கூறுவது என்ன?

இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழக (IISc) ஆய்வாளர்கள் சமீபத்திய அறிக்கையில், (Cauvery River: Land use Dynamics Bio-diversity and Hydrological Status-28.11.23) காவிரி வடிநிலப்பகுதியில், 1965-2016 இடைப்பட்ட காலத்தில், தமிழக மற்றும் கர்நாடக பகுதியில், காடுகளின் பரப்பு குறைந்தும், வேளாண் நிலங்களின் பரப்பும் அதிகரித்ததால், நீரின் தேவை இரு மாநிலங்களிலும் அதிகரித்ததை சுட்டிக்காட்டுகிறது.
2016ல் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் பயிரிடப்படும் பகுதி 2 சதவீதம் அதிகரித்தும், காடுகளின் பரப்பு 2 மாநிலங்களிலும் குறைந்ததால் காவிரி நதி மூலம் பூர்த்தியாகும் நீர்த்தேவை இரு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதை ஆய்வறிக்கை சுட்டுகாட்டுகிறது.
மேலும், இரு மாநிலங்களும், நீர் நிலைகளை (காவிரி) பராமரிப்பதில் போதிய அக்கறை காட்டாததால், காவிரியில் நீரை சேமித்து வைக்கும் அளவு குறைந்ததும், காவிரி நீரின் தேவையை அதிகப்படுத்தியுள்ளது.