Red Rice Aval Upma : ஹெல்தி மற்றும் டேஸ்டியான ப்ரேக் பாஸ்ட் ரெசிபி! சிவப்பரிசி அவல் உப்புமா!
Red Rice Aval Upma : சட்டுனு செய்ய முடிஞ்ச ஒரு ப்ரேக் பாஸ்ட் ரெசிபி சிவப்பரிசி அவர் உப்புமா. ஹெல்தியானதும், டேஸ்டியானதுமாகும். எப்படி செய்லாம்னு பார்க்கலாம்.
சிவப்பரிசி அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலை விட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவது தான். அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும்.
தேவையான பொருட்கள்
சிவப்பரிசி அவல் – 1 கப்.
காரட் துருவல் - கால் கப்.
வேக வைத்த பச்சை பட்டானி - கால் கப்.
வேக வைத்த நிலக்கடலை - கால் கப்.
தாளிக்க
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பச்ச மிளகாய் – 4
தேங்காய் துருவல் – அரை கப்
வெங்காயம் – பெரியது 1 பொடியாக நறுக்கியது
செய்முறை
சிவப்பரிசி அவல் 1 கப் எடுத்து நீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். நிலக்கடலையை தனியே ஊற வைக்க வேண்டும்.
காரட்டை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம்இ கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.
அவை அனைத்தும் பொறிந்தவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும், பின்னர் நறுக்கிய கேரட்டை சேர்த்து கிளறவும்.
பின்னர் உப்பு சேர்த்து அதில் வேக வைத்த பட்டானி, கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். இறுதியாக கடைசியாக அதில் சிவப்பரிசி அவலை நீர் வடித்துவிட்டு சேர்க்க வேண்டும். மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நீர் விட்டு 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் கொத்தமல்லித்தழை சிறிதளவு தூவி இறக்க வேண்டும்.
சுவையான சிவப்பரிசி உப்புமா தயார்.
சாதாரண அவல் உப்புமாவையும் இதே செய்முறையில் செய்யலாம். அதை தனியான தண்ணீர் விட்டு இறுதியாக வேக வைக்க வேண்டிய தேவையில்லை. சிவப்பரிசி அவல் சிறிது கெட்டியாக இருக்கும் என்பதால் அதை நாம் நன்றாக வேக வைப்பது அவசியம்.
தேங்காய் சட்னி அல்லது காரச்சட்னி எதுவேண்டுமானாலும் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.
டாபிக்ஸ்