Raksha Bandhan 2023 : ராக்கி அணிவித்து, ரக்ஷா பந்தனில் உங்கள் சகோதரர்களுக்கு பரிமாற ஏற்ற உணவுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Raksha Bandhan 2023 : ராக்கி அணிவித்து, ரக்ஷா பந்தனில் உங்கள் சகோதரர்களுக்கு பரிமாற ஏற்ற உணவுகள்!

Raksha Bandhan 2023 : ராக்கி அணிவித்து, ரக்ஷா பந்தனில் உங்கள் சகோதரர்களுக்கு பரிமாற ஏற்ற உணவுகள்!

Priyadarshini R HT Tamil
Aug 26, 2023 04:00 PM IST

Raksha Bandhan 2023 : ராக்கி என்பது ஒரு கயிறை சகோதரர் கையில் கட்டுவது மட்டுமல்ல. அவர்களிடையே உள்ள இணைப்பை காட்டும் ஒரு பண்டிகை ஆகும்.

ரக்ஷா பந்தனுக்கு பரிமாறும் உணவுகள்
ரக்ஷா பந்தனுக்கு பரிமாறும் உணவுகள்

ராக்கி என்பது ஒரு கயிறை சகோதரர் கையில் கட்டுவது மட்டுமல்ல. அவர்களிடையே உள்ள இணைப்பை காட்டும் ஒரு பண்டிகை ஆகும்.

இந்தாண்டு ராக்கி என்ற ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 30ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. உங்கள் சகோரருக்கு இரவு 9 மணி ராக்கி அணிவிக்க சிறந்த நேரம். ரக்ஷா பந்தன் அந்த நேரத்தில்தான் முடிகிறது.

அந்தப்பண்டிகை வெறும் ராக்கி சம்பரதாயத்துடன் மட்டுமல்ல அன்றைய நாளில் சிறப்பான் விருந்தும் பரிமாறப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ராக்கி அணிவித்து, விருந்து கொடுத்து உங்கள் சகோதரர்களின் வாழ்வு செழிக்க வேண்டி கொண்டாடி மகிழுங்கள். இனிய ராக்கி வாழ்த்துக்கள்.

பாவ் பாஜி

இந்தியாவின் புகழ்பெற்ற தெருவோர உணவு என்றால் பாவ் பாஜி. உங்கள் ராக்கி பண்டிகையை கொண்டாட இது சிறந்த உணவு. தக்காளி தொக்கை வெண்ணெயில் தோய்த்தெடுத்த பன்னுடன் சேர்த்து பரிமாறும்போது, உங்களின் மகிழ்ச்சியை அது இரட்டிப்பாகும்.

சோலே பட்டுரே

இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்த உணவு. ராக்கி போன்ற சிறப்பு நாட்களில் இதை பரிமாறும்போது நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இதை வீட்டில் செய்து உங்களின் ராக்கி பண்டிகையை கொண்டாடுங்கள்.

வெஜ் புலாவ்

இதை வீட்டில் எளிதாக செய்து விடலாம். குறைந்த நேரமே இருந்தாலும் இதை நீங்கள் உடனடியாக செய்து உங்கள் சகோதரருக்கு பரிமாறலாம். இதை பச்சை சட்னி அல்லது தயிர் தொட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிடலாம். இதுவும் உங்கள் ராக்கியை மகிழ்ச்சியாக்கும்.

கீவார்

ராக்கி அன்று நிறைய இனிப்புகளுடன் பரிமாறப்படும் ஒரு உணவு ஆகும். எனவே ராக்கி என்றால் சீவார் கண்டிப்பாக பரிமாறப்படவேண்டிய இனிப்பு. இதையும் நீங்கள் வீட்டில் செய்து மகிழலாம்.

குலாப் ஜாமூன்

உடனடி குலாப் ஜாமூன் மிக்ஸ் மாவை பால் சேர்த்து சிறு, சிறு துண்டுகளாக உருட்டி எண்ணெயில் பொறித்தெடுத்து, சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்தால், குண்டு குண்டு குலாப் ஜாமூன் கிடைக்கும். இதையும் சேர்த்து உங்கள் ராக்கி விருந்தை இன்னும் சிறப்பாக்குங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.