Rain Water : மேகங்களிலும், மழை நீரிலும் கலந்த நெகிழி நுண்த்துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rain Water : மேகங்களிலும், மழை நீரிலும் கலந்த நெகிழி நுண்த்துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Rain Water : மேகங்களிலும், மழை நீரிலும் கலந்த நெகிழி நுண்த்துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Priyadarshini R HT Tamil
Oct 05, 2023 06:40 AM IST

உலகத்து நீர்களில் மழைநீர் மிகவும் தூய்மையானது என்ற நிலை மாறி தற்போது அதுவும் பயன்படுத்த முடியாத சூழலுக்கு சென்றுள்ளது.

Rain Water : மேகங்களிலும், மழை நீரிலும் கலந்த நெகிழி நுண்த்துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Rain Water : மேகங்களிலும், மழை நீரிலும் கலந்த நெகிழி நுண்த்துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக, ஆய்வாளர் அயன் கசின்ஸின் ஆய்வில் மழைநீரில் பெர் & பாலிஃபுளூரோ ஆல்கைல் பொருட்கள் (PFA) அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதை (நீர், காற்று, மண்) கண்டுபிடித்துள்ளார்.

PFA அளவு அதிகமாக இருந்தால், புற்றுநோய், மலட்டுத்தன்மை, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு (Developmental Delay) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவை எளிதில் மக்காத தன்மை கொண்டிருப்பதால் அவற்றை "Forever Chemicals" என அழைக்கின்றனர். அவை நீர் (குடிநீர் உட்பட), மண், காற்று அனைத்திலும் (அண்டார்ட்டிகா உட்பட) கலந்துள்ளது என்ற செய்தி Environmental Science Technology என்ற ஆய்வுக் இதழின் கட்டுரையில் வெளிவந்துள்ளது.

இது போதாது என்று, தற்போது மேகங்களில் நெகிழித் துகள்கள் (Microplastics) அல்லது ரப்பர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானிய ஆய்வாளர்கள் ஜப்பானின் மிக உயரமான மலையான புஜீ மலையிலும், டோக்யோ நகருக்கு வெளியில் உள்ள ஒயாமா மலைகளுக்கு அருகிலுள்ள மேகங்களின் நீரை ஆய்வு செய்தபோது, பாலி எத்திலீன், பாலி புரோபிலீன், பாலி கார்பனேட் உட்பட 9 நுண் நெகிழித் துகள்களும், ரப்பர் துகள்களும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

1 லிட்டர் மேக நீரில்,7-94 மைக்ரோமீட்டர் அளவுடைய 7-13 நுண்துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரை Environmental Chemistry Letters இதழில் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

இதன் முலம் 2 முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளது.

1 உலகில் ஓராண்டில் 430 மில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்படுவதில் மூன்றில் 2 பங்கு மறுசுழற்சி செய்யப்படாமல் மண், நீர், கடலில் கலக்கிறது. அவை கடலில் இருந்து வெப்ப மண்டல அடுக்கிற்கு (Troposphere) சென்றுள்ளது.

2 சுருங்கல் முறையில் (Condensation) மேகங்கள் உருவாகும் போது நுண் நெகிழி அவற்றில் உள்ளதால், மழைநீரிலும் அவை நிச்சயம் இருக்கும்.

மேகங்களில் இருக்கும் நுண்நெகிழிகள் மேகங்கள் உருவாதலை பாதிப்பதோடு, பருவநிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

மத்திய அரசு "தூய்மை பாரதம்" திட்டத்தின் கீழ் தரையில் உள்ள குப்பைகளை அள்ளுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது. மழைநீரிலும் குடிபுகுந்த நுண்நெகிழி (Micro plastics) யை ஒழிப்பதிலும் அக்கறை காட்டினால் மட்டுமே வருங்கால சந்ததியினரின் உடல்நலத்தை பேணிகாக்க முடியும்.

அரசு சமீபத்திய அறிவியல் ஆய்வுகளை கணக்கில்கொண்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.