Tamil News  /  Lifestyle  /  Puducherry Tour India's First The Wall Of Honor Located In Puducherry
தியாகப் பெருஞ்சுவர்
தியாகப் பெருஞ்சுவர்

Puducherry Tour: புதுச்சேரிக்கு டிராவல் பண்ணா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க!

19 March 2023, 15:24 ISTManigandan K T
19 March 2023, 15:24 IST

Puducherry Trip: அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், Sacred Heart of Jesus Basilica தேவாலயம், Immaculate Conception Cathedral தேவாலயம் ஆகியவை அமைந்துள்ளன.

வெயில் காலம் வரத் தொடங்கி விட்டது. கோடை விடுமுறை வெகுவிரைவில் வந்துவிடும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு யோசித்து வருகிறார்களா?

ட்ரெண்டிங் செய்திகள்

பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் புதுச்சேரி. கடற்கரை நகரம் என்பதால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.

பிரெஞ்சு ஆளுகையில் இருந்த இடம் என்பதால் பிரெஞ்சு கட்டடங்கள் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் படையெடுக்கும் ஓரிடமாகவும் புதுச்சேரி திகழ்ந்து வருகிறது.

மதுபானங்களின் விலை குறைவு என்பதால் அதற்காகவே புதுச்சேரி டிரிப் போடும் இளைஞர்களின் கூட்டமும் அதிகம்.

கடற்கரை, பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இதுமட்டும்தான் புதுச்சேரியில் இருக்கிறாதா? என்றால் அப்படி கிடையாது.

அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், Sacred Heart of Jesus Basilica தேவாலயம், Immaculate Conception Cathedral தேவாலயம் ஆகியவை அமைந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல் சர்வதேச நகரமான ஆரோவில், புதுச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

எப்படி செல்லலாம்?

புதுச்சேரியில் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவை இருக்கிறது.

இந்த வழியாக புதுச்சேரியை அடையலாம். காரில் வருபவர்கள் ஈஸிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தியும் சென்றடையலாம்.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் புதுச்சேரியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் விடுதிகள் மிக அதிகம்.

பட்ஜெட் ஹோட்டல்கள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை இருக்கிறது. இந்திய உணவுகளும், வெளிநாட்டு உணவுகளும் கிடைக்கும்.

பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்கள் அதிகம் இருக்கும் பகுதி WHITE TOWN.

புதுச்சேரி கடற்கரை
புதுச்சேரி கடற்கரை

இங்கு ஹோட்டல் எடுத்துக் கொண்டால் நடக்கும் தொலைவில் கடற்கரை இருக்கும்.

கடற்கரையை பார்க்கும் வகையிலான ஹோட்டல்களும் உள்ளன.

சுதந்திர போராட்டக்காலத்தில் தமிழகத்திலிருந்து பிரிட்டஷார் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மகாகவி பாரதியாளர் சிறிது காலம் புதுச்சேரியில் தங்கி இருந்தார். அங்கு அவர் வாழ்ந்த நினைவு இல்லமும் நன்றாக பராமரிக்கப்படுகிறது.

அங்கும் தவறாமல் சென்று பாருங்கள். கவிஞர் பாரதிதானின் பிறந்த மண் என்பதால் அவரது அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் காலத்தால் அழியாத கவிஞர்களின் இல்லத்தையும் தவறாமல் பார்வையிடுங்கள்.

இதுதவிர, ஒயிட் டவுனில் உள்ள போலீஸ் அருங்காட்சியகம், கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை, பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம் ஆகியவற்றையும் பாருங்கள்.

மகாத்மா காந்தி சிலை
மகாத்மா காந்தி சிலை

மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே 75 ஆண்டு கால சுதந்திரத்தை போற்றும் வகையில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தியாகப் பெருஞ்சுவருக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக போராடிய மாவீரர்களின் பிறந்த ஊரிலிருந்து மண் எடுத்து அஸ்திவாரத்தில் வைத்து இந்த மகத்தான தியாகப் பெருஞ்சுவரை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் முதல் தியாகப் பெருஞ்சுவர் என்ற பெருமையையும் புதுச்சேரி பெற்றிருக்கிறது.

புதுச்சேரி கடற்கரையில் அழகான சூரிய உதயம்
புதுச்சேரி கடற்கரையில் அழகான சூரிய உதயம்

இந்த இடத்தையும் தவறாமல் விசிட் பண்ணுங்க. இன்னும், பீச் ஸ்போர்ட்ஸ், உணவகங்கள் என பல இடங்கள் இருக்கின்றன.

அப்புறம் என்ன? புதுச்சேரியை Explore பண்ண ரெடி தானே!

டாபிக்ஸ்