Protein Snacks : தசைகளை வலுவாக்கும், திசுக்களை சரிசெய்யும் புரதம்! இந்த 5 சிற்றுண்டிகளில் அதிகம்!
Protein Snacks : நீங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டுவிட்டு வருந்துபவரா? எனில் உங்களுக்கு புரதச்சத்து நிறைந்த இந்த 5 சிற்றுண்டிகள் உதவும். எடை மேலாண்மைக்கும் நல்லது.
புரதச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் சிற்றுண்டிகளை விரும்பினால், உங்களுக்கு இங்கு சில தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. உடலின் பல்வேறு இயக்கத்துக்கு காரணமாகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. திசுக்களை சரிசெய்து ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது. ஆனால் புரதம் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்பது கடினம். எனவே இந்த 5 சிற்றுண்டிகளும் உங்களுக்கு புரதச்சத்து கிடைக்க உதவும்.
நட்ஸ் மற்றும் சீட்ஸ்
பல்வேறு நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் கலந்த கலவை. இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃபைட்டோகெமிக்கல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
புரதம் நிறைந்த பார்கள்
இந்த பார்களில் ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து கிடைக்கச்செய்கிறது. அது உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைக்கிறது. இவை உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்த தேர்வு. உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது முன்னர் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக்ஸாக புரதம் நிறைந்த பார்கள் உள்ளன. எனவே உணவுக்கு இடையில் இதை எடுத்துக்கொள்ளலாம்.
பாதாம்
பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை மனஅழுத்தத்தை போக்க உதவுகிறது. இதில் புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. அடிக்கடி பாதாம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வறுத்த கொண்டைக்கடலை
வறுத்த கொண்டைக்கடலை ஒரு தாவர உணவு. இதை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் புரதம் மட்டுமல்ல நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளும் நிறைந்துள்ளது. இவை கொழுப்பு, ரத்த அழுத்தம், ரத்தச்சர்க்கரை அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. அது உங்களின் குடல் ஆரோக்கியத்துக்கும், உங்கள் எடை மேலாண்மைக்கும் உதவுகிறது.
மக்காணா
மக்காணாவில் கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவும் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதில் புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. குளுட்டன் இல்லாமல் உள்ளது. புரதம் நிறைந்துள்ளதால் உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.
டாபிக்ஸ்