Positivity at Home : ஐந்தரை பெட்டி போதும்! ஆரோக்கியம் மட்டுமல்ல பரிகாரமும்! நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும் மசாலாக்கள்!-positivity at home five and a half boxes are enough not only health but also remedy spices that bring positive thought - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Positivity At Home : ஐந்தரை பெட்டி போதும்! ஆரோக்கியம் மட்டுமல்ல பரிகாரமும்! நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும் மசாலாக்கள்!

Positivity at Home : ஐந்தரை பெட்டி போதும்! ஆரோக்கியம் மட்டுமல்ல பரிகாரமும்! நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும் மசாலாக்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2023 05:00 PM IST

Positivity at Home : எண்ணங்கள் நம்மை மேப்படுத்தும் எண்ணங்களாக இருக்க வேண்டும். எண்ணங்கள் எப்போதும் வலிமை வாய்ந்தவை. நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றும் வழிகள்!

உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் தோன்ற செய்ய வேண்டிய பரிகாரங்கள்.
உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் தோன்ற செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் நிறைய உப்பு எடுத்துக்கொண்டு, 7 கிராம்பை அதில் பரப்பி வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் காட்டி ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். வீட்டில் யாரேனும் நுழையும்போது அவர்கள் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டும். இது அந்த இடத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழித்துவிடுமாம். இதை நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. மாதத்திற்கு ஒருமுறை இதை மாற்றி வேண்டும். மாற்றும்போது உப்பை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சேர்த்து ஓரிரவு அப்படியே வைத்துவிட்டு, அடுத்த நாள் கீழே ஊற்றி விடவேண்டும்.

ஒரு சிறிய மண் சட்டி அல்லது அகல் விளக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். 2 ஏலக்காய், கற்பூரம், கிராம், பிரிஞ்சி இலை அனைத்தையும் அதில் சேர்த்து எரியவிட்டு, வீடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தீப ஆராதனைப்போல் காட்டவேண்டும். இதிலிருந்து வரும் மணம் நமது வீடு முழுவதிலும் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும். வியாழன்தோறும் மாலை 6-8 மணிக்குள் செய்யலாம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் பன்னீர் சேர்த்து, அதில் இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, 2 பச்சை கற்பூரம், சிறிதளவு மஞ்சள் ஆகிய அனைத்தையும் சேர்த்து வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்யலாம். ஒரு வாரத்தில் அந்த பன்னீர் வற்றிவிடும். அதை செடியில் ஊற்றிவிட்டீர்கள் என்றால் எப்போதும் செடி நறுமணத்துடனே இருக்கும்.

ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் தண்ணீர் சேர்த்து, அதில் முழு எலுமிச்சைப்பழத்தை சேர்த்து வாசலுக்கு நேராக ஹாலில் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது எலுமிச்சை பழத்தை மாற்றிவிட்டு, தண்ணீரையும் செடிகளில் ஊற்றலாம். இதுபோல் நீங்கள் செய்யும்போது உங்கள் வீட்டில் கண் திருஷ்டி கழியும்.

இதை பின்பற்றினால், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அகன்று நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.