Pongal Special: ருசியான சர்க்கரைப் பொங்கல்
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையன்று சிறப்பான ருசியான சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றி இங்கு காணலாம்.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டு அறுவடையை மக்கள் தொடங்குவர்.
பொங்கல் திருநாளன்று அனைவரது வீட்டிலும் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வர்.
சர்க்கரைப் பொங்கல் செய்முறை குறித்து இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்-
பச்சை அரிசி 1 கப்
பாசி பருப்பு 1/2 கப்
நெய் 1/4 கப்
வெல்லம் 1/2 கிலோ
முந்திரி 10
ஏலக்காய் 4
பச்சை கற்பூரம் சிறிது
உப்பு சிறிது
செய்முறை-
ஸ்டெப் 1
அரிசி,பருப்பு 10 நிமிடம் ஊற வைத்து வெல்லத்தை பாகு வைத்து கொள்ளவும்
ஸ்டெப் 2
ஒரு பாத்திரத்தில் அரிசி,பருப்பை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
சாதம் கொதித்து வந்தவுடன் அதனுடன் வெல்ல பாகு, ஏலக்காய், பச்சை கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி நெய் விட்டு இறக்கவும்
சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி