Paneer Recipe: நைட் டின்னருக்கு சப்பாத்தியா?-அப்போ இந்த இரண்டு விதமான பனீர் ரெசிப்பி சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Recipe: நைட் டின்னருக்கு சப்பாத்தியா?-அப்போ இந்த இரண்டு விதமான பனீர் ரெசிப்பி சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க

Paneer Recipe: நைட் டின்னருக்கு சப்பாத்தியா?-அப்போ இந்த இரண்டு விதமான பனீர் ரெசிப்பி சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க

Manigandan K T HT Tamil
Aug 28, 2023 06:00 PM IST

புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. சிறந்த எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது. எடை இழப்பு திட்டங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

பனீர் மக்காணி, கலாகந்த்
பனீர் மக்காணி, கலாகந்த் (freepik)

1. கலாகந்த்:

கலாகந்த் செய்ய முதலில் பனீர் தேவை. பனீர் நீங்கள் கடையில் வாங்கிக் கொள்ளலாம். கடையில் சற்று விலை அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே செய்யலாம்.

முதலில் பனீரை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பால்- 1/2 லிட்டர்

எலுமிச்சை சாறு- 1டீஸ்பூன்

செய்முறை

பாலை காய்ச்சும்போது அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதன் பிறகு அந்த பால் திரிந்து விடும்.

அந்தப் பாலை ஒரு காட்டன் துணியில் வடிகட்டிக்கொள்ளவும். 6-8 மணி நேரம் அதை உயரமான இடத்தில் துணியில் கட்டி வைக்கவும். பின்னர், அதை எடுத்து சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும். பனீர் ரெடி.

இப்போது கலாகந்த் டிஷ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

நெய்- தேவையான அளவு

condensed milk ( சுண்டிய பால்)

துருவிய பனீர் - 3/4 கப்

பாதம், பிஸ்தா - 5-10

ஏலக்காய் தூள்- தேவையான அளவு

சர்க்கரை - 1கப்

செய்முறை

ஒரு நான்ஸ்டிக் கடாயில் துருவிய பனீர், condensed milk, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து 4-5 நிமிடம் வரை நன்றாக கிளறி எடுத்து வைக்கவும்.

அதை ஒரு வெண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் உற்றிக் கொள்ள வேண்டும்.

அது ஆறிய பின்பு அதை வட்டம் அல்லது எந்தவித வடிவத்திலும் கட் பண்ணலாம். அதன் மேல், பாதம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரிக்கவும்.

இந்த கலாகந்த் இனிப்பு ரெசிப்பியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் சாப்பிடலாம். சில நாட்கள் வரை இந்த ஸ்வீட் கெடாமல் இருக்கும்.

ஸ்வீட் செய்துவிட்டோம். காரமும் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? பனீரைக் கொண்டு கார ரெசிப்பியும் செய்யலாம். வாங்க அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

பனீர் மக்காணி

தேவையான பொருட்கள்

பனீர் - 200 கிராம்

முந்திரி - 10-12

வெண்ணெய்- தேவையான அளவு

தக்காளி (பொடியாக நறுக்கியது) - 5-7

ஏலக்காய்- 2

பிரியாணி இலை - 1

சோம்பு- 1 டீஸ்பூன்

கிராம்பு- 2

பச்சை மிளகாய் - 2

காரப் பொடி- காரத்துக் கேற்ப

கரம் மசாலா- தேவையான அளவு

மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்

கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை)

உப்பு- தேவையான அளவு

பூண்டு-தேவையான அளவு

க்ரீம்

அரைக்க வேண்டிய பொருட்கள்

ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பனீர் மக்காணி செய்முறை

ஒரு கடாயில் வெண்ணெய், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் அந்த அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பிறகு அதில் உப்பு, கரம் மசாலா, காரப் பொடி, தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கலக்கவும்.

இதையடுத்து, அதில் பனீரை சேர்கவும். இதை இறக்கிய பிறகு, அதன் மேல் க்ரீம் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.

சுட சுட பனீர் மக்காணி ரெசிப்பி தயார். சப்பாத்தி, பராதா ஆகியவற்றுடன் பனீர் மக்காணியை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.