Pacha Chutney : பட்டைய கிளம்பும் சுவையில் பட்டுன்னு அரைச்சிடலாம் பச்சை சட்னி!
Pacha Chutney : பட்டைய கிளப்பும் சுவையில் பட்டுன்னு அரைக்கலாம் பச்சை சட்னி. அந்த சட்னி செய்வது எப்படி?
பச்சை சட்னி செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 3 பல்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 2
சீரகம் – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சையாக வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, மிளகாய் தூள், உப்பு என அனைத்து பொருட்களையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுதுகளை சேர்க்க வேண்டும்.
இந்த சட்னியை சேர்த்து இரண்டு நிமிடத்துக்கு மேல் கொதிக்க விடவேண்டும்.
இதை பச்சையாக அரைத்திருப்பதால், அந்த வாசம் சிறிதளவு போக வேண்டும். பின்னர் இறக்கிவிடலாம்.
சுவையான வெங்காயம், தக்காளி பச்சை சட்னி சாப்பிட தயாராக உள்ளது. இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இடியாப்பம், உப்புமா, பொங்கல் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இது செய்வதற்கு மிக எளிமையான ஒன்று என்பதால், தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்கள் அடிக்கடி செய்து சாப்பிடலாம். காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் பெண்களும், இதை செய்வது எளிது. இதற்கு தேவைப்படும் பொருட்களும் குறைவுதான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்