Oats poridge recipe: ஊட்டச்சத்துகளும் நார்ச்சத்தும் நிறைந்த ஓட்ஸ் போரிட்ஜ்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oats Poridge Recipe: ஊட்டச்சத்துகளும் நார்ச்சத்தும் நிறைந்த ஓட்ஸ் போரிட்ஜ்

Oats poridge recipe: ஊட்டச்சத்துகளும் நார்ச்சத்தும் நிறைந்த ஓட்ஸ் போரிட்ஜ்

I Jayachandran HT Tamil
Jan 01, 2023 08:47 PM IST

ஊட்டச்சத்துகளும் நார்ச்சத்தும் நிறைந்த ஓட்ஸ் போரிட்ஜ் செய்முறை பற்றி இங்கு காணலாம்.

ஓட்ஸ் போரிட்ஜ்
ஓட்ஸ் போரிட்ஜ்

ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ் செய்யத் தேவையானபொருட்கள்:

ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி,

பொடியாக நறுக்கின கேரட் - ஒரு மேசைக்கரண்டி, பொடியாக நறுக்கின பீன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி, பொடியாக நறுக்கின முட்டை கோஸ் - ஒரு மேசைக்கரண்டி,

பொடியாக நறுக்கின இஞ்சி - 3/4 தேக்கரண்டி,

பொடியாக நறுக்கின பூண்டு - ஒரு தேக்கரண்டி, பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்),

வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி,

எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்), சர்க்கரை(சீனி) - கால் தேக்கரண்டி,

மிளகு தூள் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

காய்கறிகள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதி வந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும்.

அதன் பின்னர் முட்டைகோஸ் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.சுவையான ஓட்ஸ் போரிட்ஜ் தயார். தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும்.

அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்.

எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

மேலாக சிறிது கார்ன்ஃப்ளேக்ஸ் தூவி சாப்பிட்டால் இடையிடையே மொறுமொறுப்பாக சாப்பிட சுவையாக இருக்கும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.