Neem Flower Powder : நீரிழிவு நோயின் எதிரி! வயிற்றுப் பூச்சிகளுக்கு எமன்! வேப்பம்பூப்பொடி செய்வது எப்படி?
Neem Flower Powder : வேப்பம் பூ உடலுக்கு வெளியேயும், உள்ளேயும் பயன்படுத்தலாம். வேப்பம்பூக்கள் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொன்று கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
வேப்பம்பூக்கள் பச்சடி, ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சித்திரை திருநாளன்று மக்கள் வேப்பம்பூ ரசம் மற்றும் வேப்பம்பூ மாங்காய் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். வேப்ப மரம், இலை, பூ, என அனைத்தும் நன்மை அளிக்கக்கூடியலைதான். வேப்பிலை பல்வேறு பிணிகளுக்கு மருந்தாகும் உடலுக்கு வெளியே பயன்படுத்தப்படுகிறது.
வேப்பம் பூ உடலுக்கு வெளியேயும், உள்ளேயும் பயன்படுத்தலாம். வேப்பம்பூக்கள் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொன்று கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையில் இருப்பது உடல் நலனுக்கு சிறந்தது. இந்த மூன்றையும் சம அளவில் உடலில் பராமரித்தால் நோய்களே நம்மை அண்டாது. அவற்றை சரியான அளவில் பராமரிக்க வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமப்படும்.
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம், வாதம், பித்தம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசல் பாதுகாக்கப்படும்.
வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம் பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட காய்ச்சல் நீங்கும்.
வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை நீங்கும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி வயிறு சுத்தமாகும்.
இவ்வாறு வேப்பம்பூவின் மருத்துவ குணங்கள் இவ்வளவு இருக்கும்போது, அதை நாம் பொடி செய்து உண்டு பயன்பெறலாம். வேப்பம் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வேப்பம் பொடி செய்ய தேவையான பொருட்கள்
வேப்பம் பூக்கள் – அரைகப் (சித்திரை மாதங்களில் நன்கு முதிர்ந்த வேப்ப மரங்களில் பூத்து குலுங்கும்)
காய்ந்த மிளகாய் – 5 – 6
கொத்தமல்லித்தூள் – அரை ஸ்பூன்
பாதாம் பருப்பு – 5
வெல்லம் – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
வேப்பம் பூ மற்றும் காய்ந்த மிளகாயை எண்ணெயில்லாமல் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் வெல்லம், பாதாம், கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்றாக ஆறவிடவும்
பின்னர் பொடியை அரைக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி அல்லது சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிடித்து சாப்பிடி கசப்பு சுவை தெரியாது. இந்தப்பொடி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இது கசக்காது. வெறும் வேப்பம் பூவை மட்டும் நிழலில் உலர்த்தி, மென் வறுவலாக வறுத்து பொடி செய்து அப்படியேவும் பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்