தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  National Pizza Day 2024: Date, History And Significance Of Pizza

Pizza Day 2024: பீட்சா உருவானது எப்படி?..யார் அறிமுகம் செய்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Feb 09, 2024 07:00 AM IST

National Pizza Day 2024: தேசிய பீட்சா தினம் (பிப்.09) இன்று. இந்தநாளில் பீட்சா உருவான வரலாறு முதல் இன்றுவரை பலரது விருப்ப உணவாக மாறியது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

தேசிய பீட்சா தினம்
தேசிய பீட்சா தினம் (Shutterstock)

ட்ரெண்டிங் செய்திகள்

சீஸ், காய்கறிகள், இறைச்சி, தக்காளி, மசாலாக்கள் போட்டு செய்யப்படும் இந்த உணவில் இன்றைக்கு பல வகைகள் வந்துவிட்டன. ஆனால், இந்த பீட்சா எங்கிருந்து வந்தது, முதன் முதலில் யார் அறிமுகப்படுத்தியது என்பது எல்லாம் ஒரு சுவாரஸ்யம் தான். அதுபற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். ஏனேனில், இன்றைக்கு தேசிய பீட்சா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆம், ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 9 ஆம் தேதி தேசிய பீட்சா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அதன் வரலாறு குறித்து பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள், ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் பீட்சாவை பிளாட்-பிரெட் வடிவில் டாப்பிங்ஸ் கொண்டு தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இருப்பினும்,8 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டின் நேபிள்ஸின் தாயகமான தென்மேற்கு கம்பானியா பிராந்தியத்தில் பீட்சா முதன் முதலாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பீட்சா முதலில் எளிமையான உணவாகக் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது.

1889 ஆம் ஆண்டில், இத்தாலிய மன்னர் முதலாம் உம்பர்ட்டோ மற்றும் ராணி மார்கெரிட்டா ஆகியோர் நேபிள்ஸை சுற்றி வந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​விவசாய கிராமங்களை அவர்கள் பார்வையிட்டனர். அந்த நேரத்தில் பிரஞ்சு உணவில் சலிப்படைந்ததாகவும், ராணி விவசாய கிராமங்களில் தயாரிக்கப்படும் பீட்சாக்களை சுவைத்தார் என்றும் அதன் பின்னர் அந்த டேஸ்ட் பிடித்துப்போக, சமையல்காரர்களிடம் பீட்சா குறித்து கூறி தயாரிக்க சொன்னார். மென்மையான வெள்ளை சீஸ், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு இந்த பீட்சா தயாரிக்கப்பட்டது. இதனாலே பீட்சாவுக்கு 'மார்கெரிட்டா ' என அவரது பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இத்தாலி முழுவதும் பீட்சா பிரபலமானது. இரவு உணவிற்கு மட்டுமல்ல, மதிய உணவு மற்றும் காலை உணவாகவும் இருந்தது பிட்சா.

இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கியதும், பீட்சா அந்தந்த நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படியே அவர்கள் வேலை செய்யும் உணவகங்கள் கடைகளில் விற்கப்பனை செய்யப்பட்டது. அப்படி உலகம் முழுவதும் பிரபலமாக உண்ணப்படும் உணவாக மாறியது. இப்படித்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் உணவாக மாறியிருக்கிறது பீட்சா. 

வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த உணவு தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. இதை பிரபலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி தேசிய பீட்சா தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு எளிமையான உணவு இன்றைக்கு உலகம் முழுவதும் பலரால் விருப்பப்படும் உணவாக மாறியிருக்கிறது என்றால் மக்களுக்கு உணவின் மீதான ரசனை எப்படி மாறி இருக்கிறது என்பதை இதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்