Murungai Keerai Kadayal : சுவையான, ஆரோக்கியமான முருங்கைகீரை கடையல் பசுமை மாறாமல் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Murungai Keerai Kadayal : சுவையான, ஆரோக்கியமான முருங்கைகீரை கடையல் பசுமை மாறாமல் செய்வது எப்படி?

Murungai Keerai Kadayal : சுவையான, ஆரோக்கியமான முருங்கைகீரை கடையல் பசுமை மாறாமல் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 11, 2023 02:00 PM IST

Muringa Leaves Kadayal : முருங்கை கீரையை சாப்பிட யோசிக்கும் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் என்று கூறி சாப்பிட வைத்துவிடலாம். முருங்கக்கீரையில் உள்ள சத்துக்களும் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

சுவையான, சத்தான முருங்கை கீரை கடையல் செய்வது எப்படி?
சுவையான, சத்தான முருங்கை கீரை கடையல் செய்வது எப்படி?

முருங்கை கீரையை கர்ப்பிணிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கை கீரையில் இரும்புச்சத்து உள்ளதால், அது பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வை தடுக்கிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இளநரைக்கு தீர்வாகிறது. முருங்கை கீரை சூப்பை எடுத்துக்கொண்டால், கை, கால் வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி என அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். 

மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவை குணமாகும். மேலும் முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே பயனளிப்பவை. முருங்கைக்காய், பூ என அனைத்தையும் சாப்பிடலாம் அதனால் ஆரோக்கியமும் பெருகும்.

தேவையான பொருட்கள்

பருப்பு – அரை கப்

பூண்டு – 12 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி சிறிதாக நறுக்கியது

பெருங்காயம் – சிறிதளவு

தக்காளி – 1 சிறியது

எண்ணெய் – 4 ஸ்பூன்

முருங்கை கீரை – இரண்டு கப்

தாளிக்க

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

செய்முறை

முதலில் குக்கரில் பருப்பு, தக்காளி, பூண்டு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டு பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் முருங்கைகீரையை ஆய்ந்து நன்றாக கழுவி இதனுடன் சேர்த்த நன்றாக வதக்கிகொள்ள வேண்டும்.

பின்னர் இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, மத்து வைத்து ஒன்றிரண்டாக கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூடான சாதத்துடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாற ஆரோக்கியத்துடன், சுவையான சாப்பாடு கிடைக்கும்.

முருங்கை கீரையை சாப்பிட யோசிக்கும் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் என்று கூறி சாப்பிட வைத்துவிடலாம். முருங்கக்கீரையில் உள்ள சத்துக்களும் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.