Walking Benefits: காலை வாக்கிங், மாலை வாக்கிங்.. எது பெஸ்ட்? - டாக்டர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Walking Benefits: காலை வாக்கிங், மாலை வாக்கிங்.. எது பெஸ்ட்? - டாக்டர் பேட்டி!

Walking Benefits: காலை வாக்கிங், மாலை வாக்கிங்.. எது பெஸ்ட்? - டாக்டர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 22, 2023 01:38 PM IST

காலை நேர நடைபயிற்சி, மாலை நேர நடைபயிற்சி எது உடல்நலத்திற்கு அதிக நன்மைகளைத்தரும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மாலை  நேர நடைபயிற்சி!
மாலை நேர நடைபயிற்சி!

காலை எழுந்தவுடன் நமது தசைகள் அனைத்தும் மிகவும் இறுக்கமாக இருக்கும். இப்படி இருக்கும் போது நாம் நடைபயிற்சி செல்லும் போது அந்த இறுக்கத்தன்மையானது குறையும். 

நமது அன்றாட பணிகளின் காரணமாக மாலையில் இயல்பாகவே உடலானது ஆக்டிவாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, நமது தசைகளுக்கு நாம் வாமப் கொடுக்காமல் நேரடியாக செயலில் இறங்குகிறோம். இப்படியான ஆக்டிவான நிலையில் நாம் நடைபயிற்சி செய்வது நமக்கு காயங்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதால் நமக்கு தூக்கமானது நன்றாக வரும்.

ஆகையால் இரவு நேரங்களில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். காலையில் நடைபயிற்சி செல்வது என்பது நமது மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

காலையிலிருந்து மாலை வரை நாம் பணிகளை செய்து இருப்போம். இதனால் மூளையின் திறன் சற்று குறைந்திருக்கும் அந்த நேரத்தில் இப்படியான ஒரு வாக்கிங் பயிற்சி செய்வது என்பது, நமது ஒரு மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்

எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி  செல்வதை பழக்கமாக மாற்றுங்கள். காரணம் எடை குறைப்பில் மாலை நேர நடைபயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது

நன்றி: மருத்துவர் கார்த்திகேயன்!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.