Morning Quotes : உங்களிடம் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகவேண்டுமா? இதோ இந்த மந்திரங்களைக் கூறுங்கள்!
Morning Quotes : உங்களிடம் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகவேண்டுமா? இதோ இந்த மந்திரங்களைக் கூறுங்கள். அது உங்களுக்கு கொடுக்கும் நற்பலன்களையும் பாருங்கள்.
உங்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான மந்திரங்கள் உங்களிடம் தான் உள்ளன. இதை நீங்கள் தினமும் கூறுவதால், உங்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மேம்படும். உநுதிமொழிகள் உங்களுக்கு எப்படி உதவுகிறது என்று பாருங்கள். நாம் நம்புவதுதான் நாம். நாம் அறிவியலாளர் ஆகவேண்டும் என்று எண்ணினால் முதலில் நாம் அதை நம்மால் முடியும் என்று நம்பவேண்டும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் உறுதிமொழிகள் நமது ஐடியாக்களை மீட்டுருவாக்கம் செய்ய உதவுகின்றன. நமக்கு நம்பிக்கையான தோற்றத்தை தருகின்றன. எனவே நீங்கள் சில உறுதிமொழிகளை அன்றாடம் கூறி வந்தீர்கள் என்றால், அது உங்கள் மீதான உங்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் இந்த உறுதிமொழிகளை தினமும் எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியான உங்களுடன் மகிழ்ந்திருக்க அவை என்னவென்று தெரிந்துகொண்டு புன்னகையுடன் இருக்க வாழ்த்துக்கள்.
என் மனதில் உள்ளதை சாதிக்க என்னால் முடியும்
வாழ்க்கை முழுவதும் சவால்கள் நிறைந்தது. ஆனால் வெற்றிக்கான திறவுகோல் என்பது அவற்றை நீங்கள் கடக்க முடியும் என்று நம்பும்போது ஏற்படுவதுதான். இதை நீங்கள் நினைக்கும்போது நீங்கள் உங்களின் தடைகளை கடந்து ஓடுகிறீர்கள். இதனால் உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் இருக்காது. அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. உங்களின் மனநிலையும் மாறுகிறது.
நான் சரியான நேரத்தில் சரியான பாதையில் பயணிக்கிறேன்
சில நேரங்களில் நாம் அனைத்தையும் இழந்து விட்டதுபோல் அல்லது பின்தங்கியிருப்பது போல் இருக்கலாம். ஆனால் இது உங்கள் மனநிலையை மாற்றும். நடக்கும் அனைத்தும் நடப்பதுதான் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். எங்கு நீங்கள் அச்சத்தை குறைத்து பொறுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று உங்களை வழிநடத்திச் செல்லும்.
நான் மதிப்புமிக்கவன்
நாம் நமக்கே மகிழ்ச்சி, அன்பு, வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணவேண்டும். அதுதான் நாம் நமது கனவை துரத்திச் செல்ல உறுதுணையாக இருக்கும். இந்த உறுதிமொழியை தினமும் கூறுவதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையை மிகவும் நிறைவானதாக மாற்றும். உங்களுக்கு நிறைய மதிப்புக்களைத் தரும்.
நான் கவரப்பட்டேன், துரத்தவில்லை
வாழ்வில் ஒரு விஷயத்தை துரத்திக்கொண்டு சென்றால், அது உங்களை நீர்த்துப்போகச்செய்யும். அது வெற்றியோ அல்லது காதலோ எதுவாக இருப்பினும், அதிகம் துரத்தினால் துன்பம்தான். எனவே, இப்படி நீங்கள் கூறும்போது, அது உங்களின் மனநிலையை மாற்றும். இதனால் நீங்கள் பதற்ற மனநிலையில் இருந்து அமைதி நிலைக்கு மாறுவீர்கள். இந்த நம்பிக்கை உங்களை அமைதியின் இடத்தில் இருந்து அணுக உதவும். இதனால் உங்களின் மனஅழுத்தம் குறையும். உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும்.
நான் தொடர்ந்து முன்னேறுவேன்
ஒவ்வொருவரும் முன்னேற்றத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் இதுபோல் கூறும்போது, அது ஒருவரின் வளர்ச்சியைக் குறிக்கிறது. அதன் மீது அவர்கள் கொண்டுள்ள தன்னம்பிக்கை காட்டுகிறது. இது வளர்ச்சி மனநிலையை ஏற்படுத்தும். ஒவ்வொரு அனுபவத்திலும் ஒருவர் முன்னேற்றுத்துக்கான வாய்ப்பை தேடுவார். அது நல்லதோ அல்லது கடினமானதோ எதுவாக இருந்தாலும், அதில் முன்னேற்றத்தை தேடுவார்.
தவறுகளில் இருந்து கற்றல்
தவறு இயல்பானதுதான். ஒவ்வொருவருக்கும் அது பாடஙஙகள் கற்றுக்கொடுப்பதில்லை. சிலர்தான் கற்கிறார்கள் அவர்கள் முன்னேறுகிறார்கள். இந்த வாக்கியம் உங்களை உற்சாகப்படுத்தும். உங்களின் தவறுகளை ஏற்று, என்ன கற்கவேண்டும் என்பதை உணர்த்தும்.
நான் அதிர்ஷ்டசாலி
நீங்கள் எண்ணற்ற நேர்மறை விஷயங்களை உங்கள் வாழ்வில் கொண்டுவருவதற்கு நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று எண்ணுவது காரணமாகிறது. எனவே நேர்மறை எண்ணங்கள் என்பது மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடையது.
நான் நேர்மையான அன்புக்கு தகுதியானவன்
அன்பு தான் நமது உணர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இப்படி நீங்கள் கூறும்போது உங்களுக்கு அது உண்மையான, ஆழமான, நம்பிக்கையான உறவுகளை ஏற்படுத்துகிறது.
நான் எனது சிறப்பான வடிவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்
ஆரோக்கியமும் ஒரு பயணம்தான். உங்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து உழைப்பது வேண்டும்தான். அதை தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இதைக்கூறும்போது தெரியும். இது உங்கள் மீதான உங்களின் அன்பு மற்றும் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்
ஆரோக்கியம் அன்றாடம் நீங்கள் பின்பற்றவேண்டியது. இதுபோல் நீங்கள் கூறும்போது அது உங்களை முன்னேற்றத்தில் கவனத்தை செலுத்த தூண்டுகிறது. இதை நீங்கள் மீண்டும், மீண்டும் கூறும்போது, உங்களுக்கு நேர்மறை எண்ணங்களைக் கொண்டு வருகிறது. இதனால் நீங்கள் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவனம் செலுத்துகிறீர்கள். சரிவிகித உணவாக இருக்கட்டும். நடையாகட்டும், 5 நிமிட தியானமாகட்டும், உடற்பயிற்சியாகட்டும். ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துகிறீர்கள்.
தொடர்புடையை செய்திகள்