Menstrual Cups and Disc : மாதவிடாய்க்கு மென்ஸ்ட்ரூவல் கப் சிறந்ததா அல்லது டிஸ்க் உகந்ததா – ஓர் அலசல்!
Menstrual Cups and Disc : மாதவிடாய்க்கு சிறந்தது மென்ஸ்ட்ரூவல் கப்களா அல்லது டிஸ்குகளா என்று பாருங்கள்.
மாதவிடாய்க்கு பெண்கள் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது மென்ஸ்ட்ரூவல் கப் அல்லது டிஸ்க் அல்லது டாம்பான்கள் அல்லது நாப்கீன்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மென்ஸ்ட்ரூவல் கப்கள் மற்றும் டிஸ்க்குகள் இரண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. மருத்துவ உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் பொருளில் தயாரிக்கப்பட்டவை
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ஓர் அலசல்
மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகள், ஆழமில்லாத கிண்ணம்போன்ற வடிவத்தை கொண்டவை. மென்ஸ்ட்ரூவல் கப்கள் பெல்போன்ற வடிவத்தில் இருக்கும். அடியில் ஒரு சிறிய துண்டு போன்ற வடிவம் அதை எடுப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும்.
கருப்பையின் அடியில் மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகள் பொருத்தப்பட்டு, உதிரத்தை நேரடியாக சேகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். மென்ஸ்ட்ரூவல் கப்கள் கருப்பைக்கு கீழே ஒரு கவசம் போல் பொருத்தப்பட்டு, ஒரு கப்போன்ற அமைப்பில் உதிரம் சேகரிக்கப்படும்.
கப்களைவிட டிஸ்குகள் அதிகளவு உதிரத்தை சேகரிக்க கூடியவையாக இருக்கும்.
மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகள் அதில் உள்ள சிறிய தடிப்பு போன்ற பாகத்தை பயன்படுத்தி அகற்ற வேண்டும். மென்ஸ்ட்ரூவல் கப்கள், அடியில் உள்ள ஒரு பாகத்தை பயன்படுத்தி அகற்ற வேண்டும்.
மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளின் பக்கவிளைவுகள்
மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மற்ற மாதவிடாய் பொருட்களைப்போல் இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளது.
இதை பொருத்துவதில் ஏற்படும் சிக்கல்கள்
மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளை பொருத்துவதற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அவற்றை பொருத்துவது மிகவும் கடினம். எனவே முதலில் இதை பொருத்துவதே பெண்களுக்கு ஒரு சவாலான விஷயம்தான். ஆனால் புதிதாக இதை பயன்படுத்தும்போதுதான் சிரமம் இருக்கும்.
கசிவுகள்
நீங்கள் மென்ஸ்ட்ரூவல் டிஸ்குகளை சரியாக பொருத்தவில்லையென்றால், கட்டாயம் கசிவுகள் ஏற்படும். எனவே, கசிவுகளை தடுக்க அவற்றை சரியாக பொருத்திக்கொள்ள வேண்டும்.
தொற்று ஏற்படும் அபாயம்
எந்தவொரு மாதவிடாய் பொருளிலும், முறையான சுகாதாரத்தை கடைபிடிக்கவில்லையென்றால், அது நிச்சயம் தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே எந்தவொரு மாதவிடாய் பொருளை தொடுவதற்கு முன்னரும், உங்கள் கைகளை நன்றாக கழுவவேண்டும். அந்தந்த பொருளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதன்படி சுத்தம் செய்துகொள்வது மிகவும் அவசியம்.
அலர்ஜிகள் ஏதேனும் ஏற்படுமா?
நிச்சயம் சிலருக்கு சில பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே நீங்கள் அலர்ஜியை ஏற்படுத்தும் எந்த பொருளையும் பயன்படுத்த முயலாதீர்கள்.
டாபிக்ஸ்