அறிமுகமானது ஆல்டோ K10 - விலை எவ்வளவு தெரியுமா?
மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் பல கார்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பட்ஜெட் கார்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் தற்போது மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ K10 2022 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது, 3.99 லட்சம் ரூபாய் இருந்து தொடங்கி 5.83 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை Modular Hearted Platform மூலம் மாருதி சுசுகி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
மேலும் இந்த காரில் எஞ்சின் டிசைன் இன்டீரியர் போன்ற அனைத்து வசதிகளும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த காரின் சிறப்பம்சங்கள்
- இதில் ரியர் டிசைன், கிளாஸ் டிசைன், கிரில், புதிய ஷார்ப் பம்பர் போன்றவை மாற்றி புதிகாக அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் மாற்றி அமைக்கப்பட்டஇன்டீரியர், 7.0 இன்ச் ஸ்மார்ட் பிலே ஸ்டூடியோ இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், நேவிகேஷன், ஆப்பிள் கார் பிலே, புதிய டேஷ்போர்டு, இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி, ஸ்டேரிங் வீல், ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- இதில் எலக்ட்ரிகல் அடஜஸ்ட் ORVMs, Keyless என்ட்ரி, ஸ்டேரிங் மவுண்ட் ஆடியோ கண்ட்ரோல், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் K சீரிஸ் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது, இது 67 BHP பவர் மற்றும் 89NM டார்க் வசதி கொண்டதாகும்.
- மேலும் இதில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி ஸ்டாண்டர்ட், AGS அல்லது AMT கியர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- இந்த கார் மேனுவல் வேரியண்ட்டில் 24.39 KMPL மைலேஜ், ஆட்டோமேட்டிக் கியர் காரில் 24.90 KMPL மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.