‘சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்; சிரிக்க மறந்த மனிதன் மிருகம்‘ வாய்விட்டு சிரிச்சுட்டு போங்க பாஸ்!
நீங்கள் வாய்விட்டு சிரிக்கவும் மனது விட்டு அழுகவும் இங்கு சில ஜோக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.
உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!
டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
2 பேருமே தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசில காச கரியாக்குவாங்க.
நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?
FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.
PILES க்கு பார்த்து உட்காரணும்.
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.
செல்போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?
மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!
ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?
ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!
என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது, பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும், சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.
கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்?
கணிப்பொறியில் எலி வெளியே இருக்கும்.
எலிப்பொறியில் எலி உள்ளே இருக்கும்.
எப்படி இன்றைய ஜோக்ஸ், வாய்விட்டு சிரித்து, மனது விட்டு மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்காக தொகுத்து வழங்கப்படும் ஜோக்ஸை படித்து ஆறுதல் பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்