Deepavali Special: தீபாவளி ஸ்பெஷல் வேகவைத்த உளுந்து; தேங்காய்பால் முறுக்கு செய்யலாமா?
வீட்டிலேயே ருசியான வேக வைத்த உளுந்து தேங்காய் பால் முறுக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க
தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசைக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஸ்நாக்ஸ். அதிலும் தீபாவளியில் முறுக்குக்கு தனி இடம் உண்டு. அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, பட்டர் முறுக்கு என ஏராளமான வகைகள் உள்ளது. ஆனால் வேகவைத்த உளுந்து முறுக்கு செய்தது உண்டா. வாங்க செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து
அரிசி மாவு
உப்பு
சீரகம்
ஓமம்
எள்
பெருங்காயம்
செய்முறை
எண்ணெய்
தேங்காய் பால்
செய்முறை
ஒரு கப் அளவில் உளுந்தை கழுவி ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து ஒரு கப் உளுந்துக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து வேக விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் வந்த உடன் இறக்கி ஆற விட வேண்டும். உளுந்து நன்றாக ஆறிய பிறகு அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். கொஞ்சமாக தேங்காய் பால் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்த உளுந்தில் பச்சரிசி மாவை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கப் உளுந்துக்கு 3 கப் அரிசி மாவை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் எள்ளையும் சேர்த்து கொள்ளலாம். அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். அல்லது விருப்பம் உள்ளவர்கள் பட்டரை உருக்கி சேர்த்து கொள்ளலாம். அதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்தும் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்றாக சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு முறுக்கை தேவையான அச்சில் சேர்த்து பிழிந்து கொள்ளலாம். இந்த மாவை சூடான எண்ணெய்யில் சேர்த்து கொள்ளலாம். பின்னர் மிதமான தீயில் வைத்து முறுக்கை நன்றாக வேக விட வேண்டும். பின்னர் இதை திருப்பி போட்டு எடுத்தால் ருசியாக வேகவைத்த உளுந்து முறுக்கு ரெடி
குறிப்பு: காரம் பிடித்தவர்கள் அதில் கால் ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் உளுந்தை தேங்காய் பால் சேர்த்தும் வேக வைத்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்