Mint Rasam : நல்லா காரசாரமா புதினா ரசம் எப்படி செய்வது என்று பார்போமா.. ஈஸி தான்!
15 நிமிடங்களுக்குள் புதினா ரசம் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
புதினா ரசம் செய்ய தேவையான பொருட்கள்
சீரகம் 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி 1/2 டீஸ்பூன்
பூண்டு 3-4 பல்
புதினா இலைகள்
தக்காளி 1
புளி
சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
ரசம் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு 1/4 கப்
தாளிக்க
நெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
பூண்டு 2 இல்லை
சீரகம் 1/4 டீஸ்பூன்
செய்முறை
15 நிமிடங்களுக்குள் புதினா ரசம் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் மிக்ஸியில் சீரகம் 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி 1/2 டீஸ்பூன், பூண்டு 3-4 பல், புதினா இலைகள், தக்காளி 1 சேர்த்து நைஸாக அரைக்கவும். புதினாவை உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம். பின்னர் புளியை 15 நிமிடம் ஊறவைங்குகள்.
இப்போது ஒரு கடாயில்1 கப் புளி தண்ணீர் சேர்க்கவும். சிறிய நெல்லிக்காய் அளவு புளி பயன்படுத்தப்படுத்தலாம். தண்ணீர் 1 கப் ஊற்றலாம். சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, ரசம் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் அரைத்த வைத்த மசாலவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை முழுமையாக கொதிக்க விடவும்.
பின்னை 1/4 கப் துவரம் பருப்பை எடுத்து, கழுவி, 2 கப் தண்ணீரில் குக்கரில் 3 விசில் வரும் வரை சமைக்கவும். பின்னர் துவரம் பருப்பு தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின்னர் வேகவைத்த அந்த பருப்பை நன்கு பிசைந்து தனியாக வைக்கவும். ரசம் கொதிக்க்கும் போது துவரம் பருப்பு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் கூடவே நன்கு பிசைந்து வைத்த பருப்பை சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ரசம் நுரைகட்ட ஆரம்ப்பிக்கும் போது தீயை அணைத்து கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
தாளிக்க, நெய் 1 டீஸ்பூன், கடுகு 1/2 டீஸ்பூன், பூண்டு 2 இல்லை, சீரகம் 1/4 டீஸ்பூன், பூண்டு பொன்னிறமானதும், அடுப்பை அணைத்து, மிளகு தூள் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும். இதை ரசத்தின் மேல் ஊற்றி பரிமாறவும். சுவையான புதினா ரசம் ரெடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்