Kathal Masala: இது நம்ம ரெசிபி தான் - ஈஸியா செய்யலாம் கதல் மசாலா..!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kathal Masala: இது நம்ம ரெசிபி தான் - ஈஸியா செய்யலாம் கதல் மசாலா..!

Kathal Masala: இது நம்ம ரெசிபி தான் - ஈஸியா செய்யலாம் கதல் மசாலா..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2023 05:58 PM IST

சுவையான கதல் மசாலா ரெசிபி எப்படிச் செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கதல் மசாலா
கதல் மசாலா

ருசியான உணவுகளைச் சாப்பிடுவதையே சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். உணவு பிரியர்களுக்கு பல்வேறு விதமான வெரைட்டி உணவுகள் உள்ளன. ஆனால் ஒரு முறை இந்த கதல் மசாலா ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

வாங்க கதல் மசாலா எப்படிச் செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • சிறிய பலாக்காய் ஒன்று
  • இரண்டு பிரியாணி இலை
  • மூன்று காய்ந்த மிளகாய்
  • லேசாக இடித்து ஒரு தேக்கரண்டி மிளகு
  • ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • ஒரு தேக்கரண்டி மல்லித்தூள்
  • அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  • அரை கிலோ சின்ன வெங்காயம்
  • 20 பூண்டு பல்
  • இஞ்சி துண்டு சிறியது
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு இளம் சூடான தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

கரம் மசாலா செய்ய;

  • இரண்டு கருப்பு ஏலக்காய்
  • ஒரு ஜாதிக்காய்
  • மூன்று பச்சை ஏலக்காய்
  • ஒரு தேக்கரண்டி சீரகம்
  • ஒரு தேக்கரண்டி மிளகு
  • ஒரு ஜாதிபத்திரி
  • ஒரு தேக்கரண்டி சோம்பு
  • 10 கிராம்பு
  • இரண்டு கிராம் கல்பாசி
  • ஒரு பட்டை
  • ஒரு அன்னாசிப்பூ

செய்முறை

  • முதலில் கரம் மசாலா செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உப்பு சேர்த்து அரைத்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் பலாக்காய் மேல் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நடித்து தண்ணீரில் போட்டு வைக்கவும். இதன் மூலம் அந்த பலாக்காயில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும். அதேசமயம் காய் கருத்துப் போகாமலும் இருக்கும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெருங்காயம் வெங்காயம் உள்ளிட்டவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • அதன் பின்னர் பலாக்காய், சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி கடாயை மூடி விட வேண்டும்.
  • 15 நிமிடம் கழித்து கடாயைத் திறந்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
  • பின்னர் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் கடாயை மூடி வைத்துவிட வேண்டும்.
  • 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து தோலுடன் கூடிய 10 பல் பூண்டுகள், அரைத்து வைத்திருக்கும் கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கருப்பு மிளகு உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்.
  • இப்போது இளம் சூடான தண்ணீர் கொஞ்சம் சேர்த்து எட்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • அதன் பின்னர் குறைந்த அளவு தீயில் 30 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
  • அந்த மசாலா கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையும் அடுப்பை அணைத்து நன்றாகக் கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் கதல் மசாலா ரெடி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.