Idli 65: சூப்பரா டிபன் செய்யணுமா.. உடனே செய்யலாம் சுவையான இட்லி 65..!
இட்லி 65 ரெசிபி எப்படிச் செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உணவுப் பிரியர்கள் இங்கு ஏராளம் உள்ளனர். ஏனென்றால் உயிரினங்களுக்கு அடிப்படைத் தேவையே உணவு தான். உணவு தட்டுப்பாடு காரணமாக எத்தனையோ உயிரினங்கள் இங்கே உயிரிழந்து வருகின்றன.
ஒரு பக்கம் உணவு இல்லாமல் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மற்றொருபுறம் உணவுகளை வீணாக்கி வருகின்றனர். மனிதர்களுக்கு ஒவ்வொரு உணவின் மீது தனிப்பட்ட பிரியம் இருக்கும். சிலருக்கு அசைவ உணவுகள் மீது இருக்கும், சிலருக்குச் சைவ உணவுகள் மீது இருக்கும்.
அந்த வகையில், அனைவருக்கும் பொதுவாக பிடித்தமான உணவுகள் என ஒரு சில உணவுகள் மட்டுமே உள்ளன. அப்படி இட்லி, அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. இதைச் செய்முறை சற்று தாமதமானாலும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவாகும்.
இட்லி மீந்துவிட்டால் சிலர் அதனை வீணாக்குகின்றனர். சிலர் அதனை உப்புமாவாகச் செய்து சாப்பிடுகின்றனர். ஒரு புதுமையாக இந்த முறை இட்லி 65 செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
இட்லி 65-க்கு தேவையான பொருட்கள்
- ஐந்து இட்லி
- சிறிதளவு கடலை மாவு
- ஒரு பெரிய வெங்காயம்
- ஒரு தக்காளி
- ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு சீரகம்
- சிறிதளவு மிளகாய்த் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- தக்காளியை வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இட்லியைச் சதுர வடிவில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- மிளகாய்த் தூள் மற்றும் கடலை மாவு இரண்டையும் நீர் சேர்க்காமல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளின் மேல் கடலை மாவு கலவையைச் சிறிதளவு தூவி கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கலந்து வைத்துள்ள இந்த இட்லி துண்டுகளைப் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டுத் தாளிக்க வேண்டும். அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும்.
- அதற்குப் பிறகு தக்காளி சாற்றை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், அதில் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளைப் போட்டுக் கிளறி விட வேண்டும்.
- இறுதியாகக் கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கினால் சுவையான இட்லி 65 தயார். இதனைக் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்