Kollu Rasam:நெஞ்சு சளி இருமலை முறிக்கும் கொள்ளு ரசம்.. தொப்பையை குறைக்கும் அருமருந்து ட்ரை பண்ணுங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kollu Rasam:நெஞ்சு சளி இருமலை முறிக்கும் கொள்ளு ரசம்.. தொப்பையை குறைக்கும் அருமருந்து ட்ரை பண்ணுங்க

Kollu Rasam:நெஞ்சு சளி இருமலை முறிக்கும் கொள்ளு ரசம்.. தொப்பையை குறைக்கும் அருமருந்து ட்ரை பண்ணுங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 31, 2023 01:39 PM IST

கொள்ளு ரசத்திற்கு தேவையான பொருட்களையும் எப்படி செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்

கொள்ளு ரசம்
கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்

கொள்ளு

மிளகு

சீரகம்

வெந்தயம்

கடலை எண்ணெய்

கறிவேப்பிலை

பெருங்காயம்

மஞ்சள் துள்

பூண்டு வர மிளகாய்

தக்காளி

புளி

உப்பு

கறிவேப்பிலை

கொத்த மல்லி

செய்முறை

ஒரு குக்கரில் இரண்டு கப் கொள்ளு சேர்த்து கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். குக்கரில் 8 விசில் வரை வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து குக்கரில் இருந்த தண்ணீரை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் மிளகு ஒன்றரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லி விதைகளை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 2 பச்சை மிளகாய் 10 பல் பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது 1 எலுமிச்சை அளவு புளியை எடுத்து நன்றாக நீரில் கரைத்து எடுத்து கொள்ள வேண்டும். வடி கட்டிய புளி தண்ணீருடன் 2 பழுத்த தக்காளியை சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். இப்போது அரைத்து எடுத்த மிளகு சீரகத்தை விழுதை சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம் சேர்த்து பொரிய விட வேண்டும். பின் கடுகு உளுந்தை சேர்த்து பொரிய விட வேண்டும். இதில் கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு பெருங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் கரைத்து வைத்த புளி கரைசல் மசாலா பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் கொள்ளு பருப்பை வேக வைத்து எடுத்த தண்ணீரை வடி கட்டி சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது ரசம் முறை கட்டி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பாத்திரத்திரத்தில் ரசத்திற்கு தேவையான உப்பு மல்லி இலைகளை சேர்த்து கொள்ள வேண்டும். ரசம் முறை கேட்டி வந்த உடன் உப்பு சேர்த்த பாத்திரத்தில் ஊற்றி கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் கொள்ளு ரசம் செடி

மேலும் வேக வைத்த கொள்ளுடன் கடுகு உளுந்து மிளகாய் வத்தல் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் தேய்காய் துருவல் சேர்த்து கிளறினால் ருசி அட்டகாசமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.