Hing Water Benefits: எடைகுறைப்பு, வலி நிவாரணம்..! ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கும் பெருங்காய தண்ணீர்
நாள்தோறும் பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் பெருங்காய தண்ணீர் நிகழ்த்தும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்

உங்கள் வீட்டு அஞ்சறை பெட்டியில் தவறாமல் இடம்பெறும் பொருளாக பெருங்காயம் உள்ளது. கூட்டு பொறியல் முதல் குழம்பு வரை என நீங்கள் சமைக்கும் எந்த உணவாக இருந்தாலும் அதில் சிறிய அளவு பெருங்காயம் சேர்த்தால் அதன் ருசி மற்றும் மனம் கூடுதலாகும். சிறிய அளவு பயண்பாடாக இருந்தாலும் நிறைவான உணர்வை தரும் இந்த பெருங்காயத்தை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நீரற்ற தாவரத்தின் சாறாக இருக்கும் பெருங்காயம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் உணவில் ருசி மட்டுமில்லாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
முதலில் பெருங்காயம் நீரில் கலந்து குடிப்பது எப்படி என பார்க்கலாம்
வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு, பெருங்காயத்தில் நான்கில் ஒரு பகுதியை சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக கலக்கி விட்டு வெறுவயிற்றில் இந்த பெருங்காய நீரை பருக வேண்டும். இந்த நீரில் தேவைப்பட்டால் மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு கூடுதல் டோஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைப்பதோடு, எடை குறைப்பும் விரைவாக நடைபெறும்.