Kerala Style Brinjal Gravy : கேரளா ஸ்டைல் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு
Kerala Style Brinjal Gravy : கேரளா ஸ்டைல் கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது கத்தரிக்காய்கள். வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. ஃபோட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – கால் கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு – வேகவைத்தது (சிறிதளவு)
காராமணி – வேகவைத்தது (சிறிதளவு)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காய்ந்த மாங்காய் தூள் – அரை ஸ்பூன்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
மிளகு – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேங்காய் – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் தூள் என அனைத்தும் சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், மிளகு, பெருங்காயத்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறி வாசம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
இந்த வறுத்த மசாலா ஆறியவுடன் தேங்காய் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மசாலாவை வெந்துகொண்டிருக்கும் கத்தரிக்காயில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இப்போது வேகவைத்த பருப்பு மற்றும் காராமணி இரண்டையும் சேர்த்து நனறாக கொதிக்க விடவேண்டும்.
அனைத்தும் நன்றாக கலந்து வெந்தவுடன், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து இதில் சேர்க்க வேண்டும்.
இதை சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்