Kadai Roast: அசத்தலான ருசியில் தாபா ஸ்டைல் காடை ரோஸ்ட் இப்படி செய்யுங்கள்!
தாபா ஸ்டெயில் காடை ரோஸ்ட் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க மக்களே
பொதுவாக அசைவப் பிரியர்கள் சிக்கன், மட்டன், மீன் , இறால் என வகை வகையாக சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இப்போது காடை போன்ற அசைவ உணவுகளுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் தாபா ஸ்டெயில் காடை ரோஸ்ட் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க மக்களே
தேவையான பொருட்கள்
காடை
எண்ணெய்
இஞ்சி
பூண்டு
வெங்காயம்
தக்காளி
ஏலக்காய்
கிராம்பு
பட்டை
அண்ணாச்சி பூ
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
சீரகத்தூள்
மிளகாய்த்தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா தூள்
உப்பு
செய்முறை
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட வேண்டும். அதில் எண்ணெய் சூடான பிறகு ஏலக்காய் 2, பட்டை 2 துண்டு, கிராம்பு 3 அண்ணாச்சிபூ 1, சோம்பு ஒருஸ்பூன் அளவு சேர்க்கவேண்டும். சோம்பு பொரிய ஆரம்பித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கிய பின் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பிறகு அதில் நறுககி வைத்த தக்காளியை சேர்த்து மசிய விட வேண்டும். இதையடுத்து சுத்தம் செய்து கழுவி வைத்திருந்த காடையை அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
காடை நன்றாக வதங்க ஆரம்பிக்கும் போது அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1ஸ்பூன் சீரகத்தூளை சேர்க்க வேண்டும். தேவையான உப்பை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிது நேரத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். தண்ணீர் சுண்டி வரும் போது 1ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும். தண்ணீர் நன்றாக சுண்டி வரும்போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளற வேண்டும். தண்ணீர் நன்றாக சுண்டிய பிறகு அதில் சுத்தம் செய்து வைத்த மல்லி கறிவேப்பிலையை நறுக்கி சேர்த்து ஒரு முறை நின்றாக கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அவ்வளவு தான் சுடச்சுட தாபா ஸ்டெயில் காடை வறுவல் ரெடி மக்களே
இந்த காடை ஆஸ்துமா அல்சர் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவும். புரதம் அதிகம் உள்ள காடை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை இயல்பாக்குகிறது. உடலில் சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுகிறது.ஆண் வலிமையை அதிகரிக்கிறது. இப்படி ஏராளமான நன்மை தரும் காடையை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்