Diabetic Care: நீரழிவு பாதிப்பு இருப்பவர்களுக்கு அருமருந்தாக இருக்கும் இலந்தை பழம்
கெட்ட நீரை வெளியேற்றுவது முதல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை நீரழிவு பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்த அருமருந்தாக இலந்தை பழம் உள்ளது.
நீரழிவு பாதிப்பானது தற்போது இளம் வாயதினருக்கும் ஏற்படும் நோயாக இருந்து வருகிறது. மாறி வரும் உணவு முறை முதல் நாம் கடைப்பிடிக்கும் உணவுப்பழக்கம் வரை இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதை கட்டுப்படுத்தற்கான வழிகள் என்பது கடினமானது.
என்னதான் நீரழிவு பாதிப்பை குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காமலும், நோய் பாதிப்பு குறையாமல் அவதிப்படுபவர்கள் அதிகம்பேர் உள்ளார்கள்.
நீரழிவு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு உணவு கட்டுப்பாடு மிக முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சில உணவு வகைகள் இயற்கையிலேயே நீரிழவு பாதிப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் இலந்தை பழம் சாப்பிடுவதால் நீரழிவு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதோடு, மெல்ல நோயின் தீவிரமானது குறையும் என கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் இந்த பழம் நீரழிவு நோய்க்கு மருந்தாக செயல்படுகிறதா என்கிற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. பழங்களில் நிறத்தாலும், சுவையாலும் மாறுபட்டதாக இருக்கும் இலந்தை பழத்தின் கொட்டை வரை மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.
இனிப்பு, புளிப்பு சுவை கலந்து இருந்து வரும் இலந்தை பழத்தை சாப்பிட்டவுடன் அதன் கொட்டைகளை தூக்கி வீசி எறியாமல், அதை தூய்மைபடுத்தி வெயிலில் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின்னர் பொடியாக்கி, காலை எழுந்தவுடன் வெறும் வாயில் ஒரு ஸ்பூன் அளவில் போட்டுக்கொண்டு தண்ணீர் பருக வேண்டும். இதன் பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட நீர் அனைத்து வெளியேறிவிடும்.
அதேபோல் பகல் நேரத்தில் கெட்டியாக இல்லாத மோரில் ஒரு ஸ்பூன் இலந்தை பழ பொடியை கலந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
நீரழிவு பாதிப்பு இருப்பவர்கள் இரவில் தூங்குவதற்கு, இந்த பொடியை காய்ச்சி வெதுவெதுப்பான பின் பருகலாம். வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்றவை இதில் நிறைந்துள்ளது. உடல் இளைப்பாக இருப்பவர்களும் இந்த பொடியை சாப்பிடுவதன் மூலம் வலிமை பெறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்