Thyroid and Gut Health : தைராய்டுக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்!
தைராய்டுக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது. இரைப்பை குடல் நிபுணர்கள் இதுகுறித்து உங்களுக்கு நன்றாக விளக்க முடியும். அவற்றை எவ்வாறு பார்த்துக்கொள்வது என்றும் அவர்கள் உங்களுக்கு கூற முடியும்.
தைராய்ட் சுரப்பதற்கு தைராய்ட் சுரப்பிகள் மிக அவசியம். தைராய்ட் சுரப்பிகள் உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவு தைராய்ட் சுரக்காதபோதும் அல்லது அதிகம் சுரக்கும்போதும் உங்களுக்கு நோயை ஏற்படுத்துகிறது. அது மாதவிடாய், இரைப்பை குடல், இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். தைராய்டுக்கும், குடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்ளலாம்.
செரிமானம் மற்றும் வளர்சிதை ஆகியற்றை சரியாகச் செய்வதில் தைராய்ட் சுரப்பிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த சுரப்பி அதிகம் சுரக்கும்போது ஹைப்பர் தைராய்டிசம், குறைவாக சுரக்கும்போது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இது செரிமான அமைப்பை சிதைத்து குடல் இரைப்பை பிரச்னைகளை உருவாக்கலாம்.
தைராய்ட் அதிகமாக சுரக்கும்போது, அது வயிற்றுப்போக்கு ஏற்பட வழவகுக்கும், அதுவும் அடிக்கடி தண்ணீராகச்செல்லும். பசியும் அதிகரிக்கும். வயிற்று வலியுடன் உடல் எடை இழப்பு ஏற்படும்.
தைராய்ட் குறைவாக சுரக்கும்போது, மலச்சிக்கல், வயிறு உப்புசம், பசியின்மை ஏற்படும். சிலருக்கு செரிமானமின்மை, வயிறு பொருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
தைராய்டால் ஏற்படும் குடல் பிரச்னைகளை தீர்க்க வழிகள்
தைராய்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படுகிறது என்ற கீழ்வருவனவற்றை பின்பற்றி உங்கள் உடல் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.
சரிவிகித உணவு - உங்கள் உணவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். காய்கறிகள், பழங்கள், பருப்புகள் என அனைத்தும் கலந்த கலவையான உணவாக இருக்க வேண்டும். இது மலச்சிக்கலை போக்கி, வயிறு இயங்க வழிவகுக்கும்.
நீரேற்றத்துடன் இருங்கள் - நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடியுங்கள். நீரிழப்பை தடுத்து ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுத்திடுங்கள்.
அயோடின் உட்கொள்ளும் அளவை கவனியுங்கள் - தைராய்டு இயக்கத்திற்கு அயோடின் மிக நல்லது. அதை அதிகம் எடுத்தாலும், குறைவாக எடுத்தாலும் அது தைராய்டு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மருத்துவர் அல்லது டியடீஷியனை அணுகி உங்கள் உடலுக்கு தேவையான அயோடின் அளவை தெரிந்துகொண்டு அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சமாக அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளுங்கள் - ஒரேடியாக நிறைய உணவை சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள். இது செரிமானத்தை கொடுத்து, வயிறு உப்புசத்தை குறைக்கும்.
மனஅழுதத்தை குறையுங்கள் - உலகில் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் மன அழுத்தம்தான். குறிப்பாக தைராய்ட், வயிறு இரண்டுக்கும் மன அழுத்தம் நல்லது கிடையாது. எனவே, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் ஆகியவற்றை செய்து மகிழுங்கள்.
சிகிச்சையை முறையாக பின்பற்றுங்கள் - நீங்கள் தைராய்ட் பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால், அதை தவறாமல் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். முறையான உடற்பயிற்சியை பின்பற்றுங்கள். இதனால் உங்கள் தைராய்ட் ஹார்மோன்கள் சரியாக சுரப்பதுடன், உங்களுக்கு கடல், இரைப்பை பிரச்னைகள் தோன்றாது. இதைத்தவிர வேறு ஏதாவது அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை அணுகி அறிவுரை பெறுங்கள்.
டாபிக்ஸ்