International Zebra Day : சர்வதேச வரிக்குதிரைகள் தினம் – வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
International Zebra Day : சர்வதேச வரிக்குதிரைகள் தினம் – வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
சர்வதேச வரிக்குதிரைகள் தினம், ஜனவரி 31
சர்வதேச வரிக்குதிரைகள் தினம், வரிக்குதிரைகள் பாதுகாப்பு குறித்து வலியுறுத்துகிறது. அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
வரிக்குதிரை எனும் அழகிய விலங்கு
வரிக்குதிரைகளை பாதுகாப்பது குறித்து, ஒவ்வொருவரும் என்ன பங்களிக்க முடியும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, நமீபியாவின் மலைப்பாங்கான பகுதிகளிலும், கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் பாலை நிலங்களும் வரிக்குதிரைகள் அதிகம் வாழும் இடங்கள்.
வரிக்குதிரைகள் அதன் உடல் முழுவதிலும் உள்ள கருப்பு வெள்ளை கோடுகளுக்காக அறியப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால், அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய விலங்குகளுள் ஒன்றாக உள்ளது. விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், விலங்குகள் அழிந்துபோகும் நிலியில் உள்ளன.
இந்த அழிந்துவரும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த நாள் ஒரு நல் வாய்ப்பாக இருக்கும். மேலும் இதை காப்பதற்கான தீர்வை நோக்கி செல்லவும் முடியும். இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
வரலாறு
சர்வதேச வரிக்குதிரைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. காட்டில் தற்போது 3 வகை வரிக்குதிரைகள் உள்ளன. கிரேவிஸ் வரிக்குதிரை, மலை வரிக்குதிரை, தரை வரிக்குதிரை ஆகும்.
இதில் கிரேவிஸ் வரிக்குதிரைகள் அழிவு நிலையில் உள்ள வகை வரிக்குதிரைகள் ஆகும் என ஆபத்தான விலங்குகளின் சிவப்பு பட்டியலில் உள்ளது. ஆப்பிரிக்க வனவிலங்கு அறக்கட்டளை அவற்றின் எண்ணிக்கை 54 சதவீதமாக கடந்த மூப்பது ஆண்டுகளில் குறைந்துள்ளது.
ஸ்மித்சோனியனின் தேசிய உயிரியல் பூங்கா உள்ளிட்ட விலங்குகள் பாதுகாப்பு குழுக்கள் ஒன்று சேர்ந்து சர்வதேச வரிக்குதிரைகள் தினத்தை உருவாக்கின. வரிக்குதிரைகளின் வாழ்வியல் நிலை, குறைந்து வரும் அந்த உயிரினத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கமாகும்.
முக்கியத்துவம்
வரிக்குதிரைகளை பாதுகாப்பதன் தேவை மற்றும் உலகம் முழுவதும் சுற்றுக்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரியப்படுத்துவதற்கு சர்வதேச வரிக்குதிரைகள் தினம் வாய்ப்பளிக்கிறது.
வரிக்குதிரைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த நாள் முன்னிறுத்துகிறது. இந்த உயிரினங்களுக்கு பல்வேறு காரணங்களால் ஆபத்துக்கள் ஏற்படுகிறது. வேட்டை, வாழ்விடம் குறைவது மற்றும் விலங்கு மனித மோதல்கள் அவற்றின் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நாள் மக்கள், விலங்கு பாதுகாப்பு குழுக்கள் மற்றும் அரசுகள் வரிக்குதிரைகளை பாதுகாக்க ஒரு நல்ல முயற்சியை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அவை நீண்ட நாட்கள் உயிர்வாழவும் வழிசெய்யும் வகையில் திட்டமிடவேண்டும் என்றும் கூறுகிறது.
ஒன்றாக இணைந்து பாதுகாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தால் நாம் நிச்சயம் இந்த விலங்குகளை பாதுகாக்க முடியும். சுற்றுச்சூழல் சமநிலையையும் உருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வரிகுதிரைகளின் இயற்கையான மரபை பாதுகாத்து வைத்திருக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.
எனவே ஒன்றிணைந்து இந்த நாளில் இயற்கை மற்றும் விலங்குகளை காக்க உறுதி பூணுவோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்