கார்களின் எரிபொருள் தேவையைக் குறைக்க டிப்ஸ்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கார்களின் எரிபொருள் தேவையைக் குறைக்க டிப்ஸ்கள்!

கார்களின் எரிபொருள் தேவையைக் குறைக்க டிப்ஸ்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 07, 2022 02:01 PM IST

கார்களின் மைலேஜ் அதிகரிக்கும் முக்கியமான குறிப்புகள் குறித்து இங்கே காண்போம்.

<p>கார்களின் மைலேஜ் அதிகரிக்க குறிப்புகள்</p>
<p>கார்களின் மைலேஜ் அதிகரிக்க குறிப்புகள்</p>

வாகனத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் மக்கள் வாழ்ந்து . இந்நிலையில், மைலேஜ் குறைவாகக் கொடுக்கின்ற வாகனங்களை வைத்திருப்பவர்களின் செலவு எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது. இதன் தேவையை உணர்ந்து வாகன நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தில் நிரப்பும் போது அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நிரப்ப வேண்டும். மேலும் கார் வைத்திருப்பவர்கள் தொடர் பயணத்தின் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம். வாகனங்களில் கூடுதல் மைலேஜ் பெறுவதற்கான முக்கிய குறிப்புகள் கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்

பெட்ரோல் டீசல் நமது பட்ஜெட்டில் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது. வாகனங்களைப் பொறுத்தளவில் தொலைதூர பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம். அதாவது அருகில் செல்வதற்குக் கூட காரை எடுத்துச் செல்வது தேவையற்ற ஒன்றாகும்.

நீங்கள் பெரிய காராக வைத்திருந்தால் மைலேஜ் குறைவாகக் கிடைக்கும், ஏனென்றால் அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எரிபொருளை சிக்கனப்படுத்த வேண்டுமென்றால் சிறிய காரை பயன்படுத்துவது நல்லது.

வாகன பயன்பாடு

வாகனத்தின் வேகத்தைக் குறைத்து அதிகப்படுத்துவது போன்ற செயல்களைச் செய்தால் எரிபொருளின் தேவை அதிகரிக்கும். ஏனென்றால் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து மீண்டும் விரும்பிய வேகத்தை அடைவதற்கு எரிபொருள் அதிகமாகத் தேவைப்படுகிறது.

எனவே நிதானமான வேகத்தில் சென்று வாகனத்தைப் பயன்படுத்தினால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். அடிக்கடி வாகனத்தை நிறுத்தாமல் குறைவான வேகத்தில் செல்வது பட்ஜெட்டில் துண்டு விழாதவாறு பார்த்துக் கொள்ளும்.

தேவையற்ற பயன்பாடு

சாலைகளில் செல்லும்போது டிராஃபிக்கில் சிக்கிக் கொள்வது, சிக்னலில் நிற்பது என இதுபோன்ற நேரங்களில் வாகனத்தை நிறுத்திவிடலாம். காரிலேயே காத்திருக்கும் நேரம் அதிகரித்தால் வாகனத்தை நிறுத்தி வைப்பது எரிபொருளை மிச்சப்படுத்தும். காரில் இருக்கும் எஞ்சினின் வேலை நின்றுவிட்டால், எரிபொருளுக்கு வேலை இருக்காது.

காரில் இருக்கும் ஏசியின் பயன்பாட்டைக் குறைத்து விட வேண்டும். காரில் இருக்கும் ஏசி அதிகபட்சம் 8 விழுக்காடு வரை எரிபொருளை எடுத்துக்கொள்கிறது. தேவையில்லாத நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து ஏசியின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

காற்று குறைவு

வாகனத்திற்கு மிகவும் முக்கியமானது டயர்கள். சரியான அளவில் டயர்களின் காற்று இருக்க வேண்டும். சாலையோடு உருளும் போது டயர்களில் காற்று குறைவாக இருந்தால் இழுவிசை அதிகரிக்கும். அந்த நேரத்தில் எரிபொருளின் தேவை அதிகரிக்கும். டயர்களில் சரியான காற்றைப் பராமரிப்பதன் மூலம் 4 விழுக்காடு வரை எரிபொருளைச் சேமிக்கலாம்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.