Hearing Impaired in New-born : குழந்தைகளில் காதுகேளாமை பிரச்னை இந்தியாவிலே தமிழகம் முதலிடம் – அதிர்ச்சி ஆய்வு!
Hearing Impaired in New-born : குழந்தைகளில் காதுகேளாமை பிரச்னை இந்தியாவிலே தமிழகம் முதலிடம் – அதிர்ச்சி ஆய்வு!
தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் மத்தியில் காதுகேளாமை பிரச்னை மிக அதிகமாக உள்ளது. 6 பேர்/1000 Live births என அதிகமாக உள்ளது.
அகில இந்திய அளவில் அது 2/1000 Live births எனக் குறைவாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது எனத் தெரியவந்துள்ளது (66 சதவீதம்) பிற மாநிலங்களில் சொந்தத்தில் திருமணங்கள் நடைபெறவில்லையா? அங்கும் நடக்கிறது என்றால் அங்கு ஏன் காதுகேளாமை பிரச்னை எழவில்லை? என்பதற்கு விடை காண வேண்டும்.
மூன்றில் ஒரு பங்கு காதுகேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வருபவை காரணங்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
குறைப்பிரசவம் மற்றும் பிறக்கும்போது எடை குறைந்து பிறத்தல் (2500 கிராமிற்கு கீழ்)
பேறு காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று-ரூபெல்லா, ஹெர்பஸ் சிம்பிளக்ஸ், சைட்டோ மெகாலோ வைரஸ்
பிறப்பின்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் காயங்கள் (Birth Injuries)
தாய் பேறு காலத்தில் உட்கொள்ளும் மருந்து அல்லது மாத்திரைகள் மற்றும் ஆல்கஹால்
மஞ்சள் காமாலை, Rh factor பிரச்னைகள்
பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பு
பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் ரத்தக்கொதிப்பு
தலைக் காயங்கள்
மூளை சவ்வில் ஏற்படும் அழற்சி (Meningitis) மற்றும் Systemic Infections
சிறுகுழந்தைகளுக்கு ஏற்படும் சைட்டோ மெகாலோ வைரஸ் தொற்று
5 நாட்களுக்கு மேல் சிறுகுழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) பெற்ற சிகிச்சை மற்றும் சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கல்கள்
சிறு குழந்தைகள் மத்தியில் ஏற்படும் காதுகேளாமை பிரச்னை தமிழகத்தில் அதிகமாக இருப்பது, 6 பேர்/1000 Live birth என்பது 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு 2003-13 ஆண்டுகளில் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தனியாரின் பங்களிப்பு அதிகம்.
காதுகேளாமை பிரச்னையை 3 மாதங்களுக்குள் கண்டறிந்து 6 மாதங்களுக்குள் சிகிச்சை அளித்தால் தான் நல்ல பலன் கிட்டும். குழந்தைகள் 3 ஆண்டு நிறைவு பெருமுன் Cochlear Implants சிகிச்சை செய்தால் மட்டுமே பலன் கிட்டும்.
தமிழகத்தில் பிறவி காதுகேளாமை, சிறுவயதில் ஏற்படும் காதுகேளாமைமைக்கு 6 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க தமிழக அரசு முன்வந்தாலும், இதுவரை 5,000 பேருக்கு Cochlear Implants செய்யப்பட்டாலும், தொடர் ஆய்வு மறுவாழ்வு கற்றல் சிகிச்சையும் முக்கியமானது. அப்போதுதான் முழுமையான பலன் கிட்டும்.
தற்போது தமிழகத்தில் மறுவாழ்வு சிகிச்சை மையங்களை அடைய 2 மணி நேர பயணமே போதுமானது. இதன் மூலம் சிகிச்சையின்போது இடைநிற்றல் 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2022ம் ஆண்டு ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குழுவினர் செய்த ஆய்வில் தமிழகம், இந்தியாவில் செவித்திறன் குறைபாடு உடையவர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
காதுகேளாமையை ஆரம்பத்திலேயே கண்டறியும் NHS-New-born Hearing Screening பரிசோதனைகளை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்த வேண்டும்.
சிகிச்சை முறைகளை மேம்படுத்த திட்டங்கள் தேவை என்றாலும், காதுகேளாமைக்கான காரணங்களையும் கருத்தில்கொண்டு, பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தான் தமிழகத்தில் மிக அதிகமாக உள்ள சிறுகுழந்தைகள் காதுகேளாமை பிரச்சனையை (6 பேர்/1000 Live births) கட்டுப்படுத்த முடியும்.
NSSO புள்ளிவிவரப்படி காதுகேளாமை பிரச்சனை குழந்தைகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி குறைப்பாடுகளை ஏற்படுத்துவதில் 2வது இடத்தில் உள்ளது.
செவிப் பிரச்சனைகளைத் தடுக்க அரசு செவிசாய்க்க வேண்டும்!
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்