Masoor Dal Curry: ருசியான மைசூர் பருப்பு கறி செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masoor Dal Curry: ருசியான மைசூர் பருப்பு கறி செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க

Masoor Dal Curry: ருசியான மைசூர் பருப்பு கறி செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க

Manigandan K T HT Tamil
Sep 30, 2023 06:02 PM IST

Food Recipe: தக்காளி வெந்து எண்ணெய் பிரிந்ததும் ஊறவைத்த மைசூர் பருப்பை சேர்த்து கலந்து சுடுதண்ணீர் சேர்த்து கடாயை மூடி 30 நிமிடம் வேகவிடவும்.

மைசூர் பருப்பு கறி
மைசூர் பருப்பு கறி (Freepik)

தேவையான பொருட்கள்

மைசூர் பருப்பு - 1 கப்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 நறுக்கியது

பூண்டு - 2 பற்கள் நறுக்கியது

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

தக்காளி - 3 நறுக்கியது

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

ஆம்சுர் பவுடர் - 2 டீஸ்பூன்

சுடு தண்ணீர் - 1 லிட்டர்

கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

நெய் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை நறுக்கியது

கஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

தனியா தூள் - 2 டீஸ்பூன்

சீரக தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை

மைசூர் பருப்பை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, ரெண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, ஆம்சுர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.

தக்காளி வெந்து எண்ணெய் பிரிந்ததும் ஊறவைத்த மைசூர் பருப்பை சேர்த்து கலந்து சுடுதண்ணீர் சேர்த்து கடாயை மூடி 30 நிமிடம் வேகவிடவும்.

பிறகு கரம் மசாலா தூள், நெய், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான மைசூர் பருப்பு கறி தயார்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.