Neer Dosa: வித்தியாசமா இருக்கே.. அது என்ன நீர் தோசை.. இதை எப்படி செய்யனும்?
தோசைகளில் பல வெரைட்டி இருக்கிறது. நாம் நீர் தோசை எப்படி செய்வது என பார்ப்போம்.
தோசை என்பது தென்னிந்திய உணவு வகைகளில் அரைத்த கருப்பு பயறு மற்றும் அரிசியின் புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மெல்லிய சுவையான உணவு ஆகும். தோசை சூடாக பரிமாறப்படுகிறது, பெரும்பாலும் சட்னி மற்றும் சாம்பார். தோசை என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சிறந்த உணவாகும். மேலும் இது உலகெங்கிலும் உள்ள அந்தந்த உணவகங்களில் பிரபலமாக பரிமாறப்படுகிறது. காலை, இரவு வேளைகளில் தோசைக்கு மவுஸ் இருக்கிறது. தோசைகளில் பல வெரைட்டி இருக்கிறது. இப்போது நாம் நீர் தோசை எப்படி செய்வது என பார்ப்போம்.
நீர் தோசை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
உப்பு
எண்ணெய்
தண்ணீர்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்யவும்.
அடுத்து ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு கரைத்த மாவை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வேகவைக்கவும். எளிமையான மற்றும் மிருதுவான நீர் தோசை தயார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்