Achu Murukku: வழக்கமானது போல இல்லாமல் கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Achu Murukku: வழக்கமானது போல இல்லாமல் கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு!

Achu Murukku: வழக்கமானது போல இல்லாமல் கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு!

I Jayachandran HT Tamil
Jun 02, 2023 03:02 PM IST

வழக்கமானது போல இல்லாமல் கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு
கோதுமையில் ஹெல்தியான அச்சு முறுக்கு

லேசான இனிப்பு சுவையை விரும்புபவர்களுக்கு இந்த அச்சு முறுக்கு நிச்சயம் பிடிக்கும். அதிலும் அச்சு முறுக்கை உடையாமல் ஹார்ட் வடிவில் கடித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம். வழக்கமாக அச்சு முறுக்கு செய்வதற்கு மைதா, முட்டை மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இவை எதுவும் சேர்க்காமல் அச்சு முறுக்கு செய்ய முடியுமா என்ன? நிச்சயமாக முடியும். கோதுமை மாவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹெல்த்தியான அச்சு முறுக்கு ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

அச்சு முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்-

கோதுமை மாவு - 1 கப்

அரிசி மாவு - அரை கப்

நாட்டு சர்க்கரை - கால் கப்

கருப்பு எள்ளு - 1 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

அச்சு முறுக்கு செய்முறை-

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவை அளந்து எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, உப்பு மற்றும் எள் சேர்த்து நன்கு கலக்கவும்.

நாட்டு சர்க்கரைக்கு பதிலாக வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த விரும்புபவர்கள், சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஒன்றாக பொடித்து பயன்படுத்தலாம்.

தயாராக வைத்துள்ள மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலையும் பயன்படுத்தலாம்.

இப்போது கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடான பிறகு அச்சு முறுக்கின் மோல்டை சிறிது நேரம் எண்ணெயில் வைக்கவும்.

சூடாக இருக்கும் மோல்டை அச்சு முறுக்கு மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இருபுறமும் வெந்து பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.

இதே முறையில் மோல்டை சூடாக்கி மீதம் உள்ள மாவில் அச்சு முறுக்குகளை தயார் செய்யவும்.

சுடச்சுட அச்சு முறுக்குகளை குடும்பத்தாருக்குப் பரிமாறவும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.