Healthy Recipe: குடல் புற்றுநோயைத் தடுக்கும் வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Recipe: குடல் புற்றுநோயைத் தடுக்கும் வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

Healthy Recipe: குடல் புற்றுநோயைத் தடுக்கும் வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Feb 09, 2023 09:43 PM IST

குடல் புற்றுநோயைப் போக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

குடல் புற்றுநோயைத் தடுக்கும் வெண்டைக்காய் தோசை
குடல் புற்றுநோயைத் தடுக்கும் வெண்டைக்காய் தோசை

வெண்டைக்காயில் சில கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. இதனால் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தை வெண்டைக்காய் குறைக்கிறது.

இதே போல் இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.

 

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியமானதாகும். வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் புளிக்குழம்பு ஆகியவற்றை வாரத்துக்கு 3 முறைகளாவது கர்ப்பிணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளூக்கோமா பிரச்னைகளைத் தவிர்ப்பதோடு பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது.

சுவையான வெண்டைக்காய் தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

வெண்டைக்காய் தோசை செய்யத் தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,

உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,

வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப்,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வெண்டைக்காய் தோசை செய்முறை:

அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும்.

இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழ கொழப்பாக இருக்கும்.

தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்க வரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.