Thinai Pongal: ஃபிட்டாக இருக்கணுமா.. தினை பொங்கல் சாப்பிடுங்க
தினை பொங்கல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
தினை - அரை கப்
பாசிப்பருப்பு- அரை கப்
தண்ணீர் - நான்கு கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை தேக்கரண்டி
இஞ்சி - நறுக்கியது 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ரெப்பா
முந்திரி – 10
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை
- தினையை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
- பொங்கல் தயார் செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து பிரஷர் குக்கரை வைக்கவும்.
- அதில் எண்ணெய் ஊற்றி, சூடுடானவுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
- பிறகு சாதம், கறிவேப்பிலை, இஞ்சி சேர்க்கவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இப்போது ஊறவைத்த தினை மற்றும் பாசிப்பருப்பு சேர்க்கவும். நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் அதில் பச்சை வாசனை போய்விடும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடியை மூடி 4 அல்லது 5 விசில் வரும் வரை வைத்து அடுப்பை நிறுத்தவும்.
- பிரஷர் எல்லாம் போன பிறகு குக்கரின் மூடியை அகற்றி, பொங்கலை நன்றாகக் கலக்கவும்.
- இறுதியாக ஒரு சிறிய வாணலியை எடுத்து, அதை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சீரகம், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கவும்.
- இதை பொங்கலுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் தினை பொங்கல் ரெடி.
- சட்னி அல்லது சாம்பார் ஆகியவற்றுடன் இதை சாப்பிடலாம்.
தினைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது. கால்சியம் நிறைந்துள்ளதால், உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்