Tasty Recipes: சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ்க்கு பொருத்தமான சோள உருண்டையும் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipes: சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ்க்கு பொருத்தமான சோள உருண்டையும் செய்முறை

Tasty Recipes: சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ்க்கு பொருத்தமான சோள உருண்டையும் செய்முறை

I Jayachandran HT Tamil
Jun 10, 2023 06:00 PM IST

சுவையான தாய் ஃப்ரைட் ரைஸும் அதற்கு பொருத்தமான சோள உருண்டையும் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ்
சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ்

தாய் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை-

சாதம் - 500 கி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி

முட்டைகள் - 2

காரட், நறுக்கியது - 50 கி

முட்டைக்கோஸ், நறுக்கியது- 50 கி

ஃப்ரெஞ்ச் பீன்ஸ், நறுக்கியது - 50 கி

உப்பு - 1/2 மேசைக்கரண்டி

வெஜிடபிள் ஸ்டாக் - 30 மிலி,

சிறிய மிளகாய்கள் - 4

மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி

வெங்காய தாள்கள், சிறிதாக நறுக்கியது - 2 மேசைக்கரண்டி

தாய் ஃப்ரைட் ரைஸ் செய்முறை-

- எண்ணெயை சூடாக்கி, அதில் பூண்டு பேஸ்டை இட்டு வதக்கவும், பிறகு, முட்டைகள், காரட் மற்றும் கோஸைச் சேர்க்கவும்.

- பிரெஞ்ச் பீன்ஸைச் சேர்த்து, தொடர்ந்து கலக்கவும், முட்டை வெந்து, காய்கறிகள் மிருதுவாகத் தொடங்கும் வரை தொடர்ந்து கிளறி விடவும்.

- சாதத்தை இதில் கொட்டி, நன்கு கலக்கவும்.

- உப்பு, வெஜிடபிள் ஸ்டாக், மிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

- வெங்காய தாள்களால் அலங்கரிக்கவும்.

சோள உருண்டை ரெசிபி

வறுக்கப்பட்ட சோளம், பருப்பு உருண்டையுடன் ரெட் கறி விழுது, ஸெஸ்டி காஃபிர் எலுமிச்சையும் சேர்த்து காரமாக்கப்பட்டது.

சோள உருண்டை தேவையானவை :

100 கி. பாசிப் பருப்பு

30 மில்லி தேங்காய் பால்

10 கி. பனை வெல்லம்

80 கி. சோள முத்து

30 கி. ரெட் கறி விழுது

காஃபிர் எலுமிச்சை இலைகள், சிறிதளவு

உப்பு மற்றும் மிளகு சுவைக்கேற்ப

40 கி. டெம்புரா மாவு

2 தேக்கரண்டி மாவு

1 முட்டை வெள்ளைக்கரு அடித்துக்கொள்ளவும்

30 கி. வேகவைத்த அரிசி

300 மில்லி எண்ணெய், பொரிப்பதற்கு

1 தேக்கரண்டி மிளகாய் தூள்

2 தேக்கரண்டி மையோன்னைஸ்

சோள உருண்டை செய்முறை-

பாசிப் பருப்பை நன்றாக வேக வைக்கவும். தேங்காய்ப் பாலுடன் பனை வெல்லத்தை கலக்கவும்.

ரெட் கறி விழுதுடன் சோள முத்துகளை வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி பாசிப்பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.

காஃபிர் எலுமிச்சை இலைகளோடு உப்பு, மிளகை சேர்க்கவும். மாவை ஒட்டும் பதத்துக்கு வரும்வரை கலக்கவும்.

கலவையை சிறு வட்டமாக உருட்டிக்கொள்ளவும். அதை முட்டையின் வெள்ளை கருவில் தோய்த்து, அரிசியில் உருட்டவும்.

அதை கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

மிளகாய்த் தூளையும் மையோன்னைஸையும் சேர்த்து டிப்பிங் சாஸை தயாரிக்கலாம். சூடாக சோள உருண்டைகளை பரிமாறவும்.

தாய் ஃப்ரைடு ரைஸ்க்கு சோள உருண்டைகள் செம காம்பினேஷனாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.