One Pot Murungai Keerai Rice : ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்யும் முருங்கைக்கீரை சாதம்!
ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் முருங்கைக்கீரை சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
முருங்கை இலை - 1 கப்
அரிசி - 1 கப், தண்ணீர் 3 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சன்னா தால் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
பெருங்காயம்
வெங்காயம் - 10
புளி தண்ணீர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
தேவையான பொருட்கள்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது புளி தண்ணீர், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் சமைக்கவும்.
பின் அளந்த தண்ணீருடன் அரிசியைச் சேர்த்து அரிசி நன்றாக வேகும் வரை வேகவைக்கவும்.
பின்னர் முருங்கை இலைகளைச் சேர்த்து 7 நிமிடம் சமைத்து, தயிர்/ஊறுகாய் மற்றும் சில பொரியலுடன் சூடாகப் பரிமாறவும்.
நன்றி : பிரவீஸ் கிச்சன்
முருங்கைக்கீரை நன்மைகள்
மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன
முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும்.
முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது
இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்
முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும்.
தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. நரைமுடியும் குறையும்.
மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்.
தோல் வியாதிகள் தீரும்.
உடல் சூட்டை தணிக்கும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்