Sundaikai Vathal: 4 நாட்கள் கெடாத சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?
சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்புசெய்வது எப்படி என்பதைக் காணலாம்.
இன்றைய தலைமுறையினர் எளிதில் வைக்கும்; நான்கு நாட்கள் கூட கெட்டுப்போகாத சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
வேண்டும் பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு;
புளி - 2 எலுமிச்சை உருண்டை அளவு;
வத்தல் - 10;
மிளகு - 2 டீஸ்பூன்;
சீரகம் - 1 டீஸ்பூன்;
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்;
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்;
கடுகு - 1 ஸ்பூன்;
பெருங்காயம் - சிறிதளவு;
மிளகாய்ப் பொடி - அரை டேபிள் ஸ்பூன்;
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்;
கறிவேப்பிலை - தாளிக்கும் அளவு;
வெந்தயம் - அரைஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு;
துருவிய தேங்காய் - அரை முடி;
நல்லெண்ணெய் - தேவையான அளவு;
தக்காளி - ஒன்று;
வெள்ளைப்பூண்டு - நான்கைந்து பல்
செய்முறை: முதலில் மல்லி, மிளகு, கடலை பருப்பு, வெந்தயம், சிறிது மிளகாய் வத்தல், சீரகம், தேங்காய் துருவல் ஆகியவற்றை கடாயில் ஒன்று சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதேபோல், சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சுண்டைக்காயையும் வெள்ளைப்பூண்டினையும் போட்டு நன்கு வதக்கிவிட்டு தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 2 மிளகாய் வத்தல், கடலை பருப்பு, கடுகு ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அதில் கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி வதக்கவும்.
அதனைத் தொடர்ந்து எடுத்து வைத்திருந்த புளியை நீரில் கரைத்து வாணலியில் சேர்க்கவும். பின்னர், மஞ்சள்பொடி மற்றும் மிகச்சிறிதளவு மிளகாய்ப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்த வாசனை வந்தவுடன் முன்பே தயார் செய்து வைத்திருந்த வதக்கிய சுண்டைக்காய் கலவையையும், மிக்ஸியில் அரைத்த பொருட்களையும் ஒன்று சேர்த்து கொதிக்க விடவும். 25 நிமிடங்களில் இறக்கவும். சூடான நான்கு நாட்களுக்குக் கெடாத சுண்டைக்காய் வத்தல் குழம்புரெடி. அதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வேறலெவல் ருசி கிடைக்கும்.
மேலும் சுண்டைக்காய் உடலின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்