Tasty Recipes: கரும்பை ஜூஸ் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க... கரும்பு மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா?
கரும்பு ஜூஸிலிருந்து கரும்பு மிட்டாய் செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கும் கோடை வெயிலுக்கு ஜில்லென்று எதைக் குடித்தாலும் நன்றாக இருக்கும். ஆனால் செம இனிப்பாக கரும்புச் சாறு குடித்தால் அதில் கலந்துள்ள எலுமிச்சை, இஞ்சி டேஸ்ட் மிக ருசியாக இருக்கும். வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க கரும்பு ஜூஸ் சாப்பிடுவது நல்லது. இதில் வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. இதில் உள்ள குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உங்கள் உடலுக்கு உடனடி ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் இந்த ஜூஸ் வயிற்றில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும்.
ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிப்பதால் நமக்கு சோர்வு மறைந்துவிட்டு ஆற்றல் உடனடியாகப் பாய்கிறது.
இதே கரும்புச் சாறில் மிட்டாய் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும். வாருங்கள் பார்க்கலாம். கரும்பு ஜூஸில் இருந்து கேண்டி அல்லது மிட்டாய் செய்யலாம் கற்பனையில்கூட பலர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
கரும்பு ஜூஸ் மிட்டாய்
கரும்பு ஜூஸ் மிட்டாய் செய்யத் தேவையான பொருட்கள்-
2 கப் கரும்பு ஜூஸ்
கால் கப் சர்க்கரை
1 கப் கார்ன் சிரப்
1 கப் தண்ணீர்
எலுமிச்சை 2-3 சொட்டுகள்
கருப்பு உப்பு ஒரு சிட்டிகை
1 மிட்டாய் சர்க்கரை
கரும்பு ஜூஸ் மிட்டாய் செய் முறை:
ஒரு பேக்கிங் தாளை கிரீஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
கரும்பு ஜூஸ், சர்க்கரை, எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, கார்ன் சிரப் மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் சூடாக்குங்கள்.
சூடானவுடன் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
சர்க்கரை உருகியதும் கிளறுவதை நிறுத்தி விட்டு மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
இந்த கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து 20-25 நிமிடம் ஆறவைத்து செட் செய்யவும்.
இப்போது மேலே சர்க்கரையைத் தூவி 5 நிமிடம் கழித்து துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
இப்போது உங்கள் கரும்பு ஜூஸ் மிட்டாய் தயாராக உள்ளது. எடுத்து குடும்பத்தாருக்குப் பரிமாறுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் சற்று விலகி இருப்பது நல்லது.
இதேபோல் கரும்பு சாறில் வித்தியாசமாக மேலும் 2 ரெசிப்பிகளை செய்து பார்க்கலாம்.
கரும்பு ஜூஸ் கீர்
பாலில் செய்யப்பட்ட கீர் தான் பொதுவாக தயாரிக்கப்படுகிறது ஆனால் இந்த முறை வித்தியாசமாகவும் புதியதாகவும் கரும்பு ஜூஸில் கீர் செய்து பார்க்கலாம்.
கரும்பு ஜூஸ் கீர் செய்யத் தேவையான பொருட்கள்:
2 பெரிய கப் கரும்பு ஜூஸ்
2 ஏலக்காய் பொடி
1 டீஸ்பூன் அக்ரூட்
1 டீஸ்பூன் முந்திரி
1 கப் அரிசி ஊறவைத்தது
1 கப் பாதாம்
தேவையான தண்ணீர்
கரும்பு ஜூஸ் கீர் செய்யும் முறை:
அரிசியை 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்
பிறகு கரும்புச்சாற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக்கவும். 5-7 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் ஜூஸை சமைக்கவும்
பின் ஊறவைத்த அரிசியைப் போட்டுக் கிளறவும்.
5 நிமிடம் அரிசி வெந்ததும் அதனுடன் ஏலக்காயைப் பொடியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
கீர் கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் பொடியாக நறுக்கிய உலர் பழங்களைச் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
இப்போது கீர் ரெடி ஆறவைத்து உண்டு மகிழலாம்.
கரும்பு-புதினா மொய்டோ
கரும்பு ஜூஸ் மட்டும் அருந்தாமல் புதுவிதமாகக் கரும்பு - புதினா மொய்ட்டோ தயாரித்து அருந்தலாம். இந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்தை நீங்கள் விரும்புவீர்கள்.
கரும்பு-புதினா மொய்டோ செய்யத் தேவையான பொருள்:
1 கப் கரும்பு ஜூஸ்
1 எலுமிச்சை ஜூஸ்
1/2 சோடா
சுவைக்கு ஏற்ப கருப்பு உப்பு
2-3 புதினா இலைகள்
கரும்பு-புதினா மொய்டோ செய் முறை:
எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு மற்றும் புதினா இலைகளை ஒரு கிளாஸில் நசுக்கிக் கொள்ளுங்கள்.
அதனுடன் சோடா மற்றும் கரும்பு ஜூஸ் சேர்த்து, எலுமிச்சை துண்டுடன் அலங்கரித்து பானத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்