Tasty Recipe: பும்மென்று உப்பலான சுவையான பஞ்சுபோன்ற ஆப்பம் செய்முறை
பும்மென்று உப்பலான சுவையான பஞ்சுபோன்ற ஆப்பம் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
வழக்கமான இட்லி, தோசையை விட ஆப்பம் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதுவும் நல்ல கூடை போன்ற வடிவத்துடன் பஞ்சு போல மிருதுவான ஆப்பம் செய்வதெல்லாம் ஒரு தனி கலை தான். இந்த ஆப்பத்தை மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் சரியான பக்குவத்தில் செய்து விட முடியாது. இங்கு உளுந்து, வெந்தயம், சமையல் சோடா எதையும் சேர்க்காமல் பஞ்சு போன்ற ஆப்பம் செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்வோம்.
பஞ்சு போல மிருதுவான ஆப்பம் செய்முறை:
இந்த ஆப்பம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த பச்சரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உங்களிடம் ரேஷன் பச்சரிசி இருந்தால் அதையுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த அரிசியை இரண்டு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு, மீண்டும் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் வரை ஊற விடுங்கள்.
ஐந்து மணி நேரம் கழித்து இந்த மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து நனைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை தனியாக ஒரு பவுலில் ஊற்றி இந்த மாவுக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் அரிசி அளந்த கப்பில் கால் கப் அளவு மட்டும் இந்த மாவை எடுத்து, அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் இந்த மாவை சேர்த்து கால் கப் மாவுக்ற்கு ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். (இந்த அளவுகளுக்கு எல்லாம் ஒரே கப்பை பயன்படுத்துங்கள்). இதை கலந்து கொண்டிருக்கும் போது நல்ல கஞ்சி பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற விடுங்கள்.
இந்த நேரத்தில் இரண்டு கப் தேங்காய் துருவல் எடுத்துக் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தேங்காயின் பின்புறம் இருக்கும் பிரவுன் நிறத் தோலை நீக்கிய தேங்காயை தான் பயன்படுத்த வேண்டும்.
இப்போது ஆற வைத்த கஞ்சியுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து ஏற்கனவே அரைத்து ஆப்ப மாவுடன் சேர்த்து கரைத்து எட்டு மணி நேரம் வரை மாவை புளிக்க வைத்து விடுங்கள்.
எட்டு மணி நேரம் கழித்து இந்த மாவை அப்போதைக்கு தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து இன்னொரு சின்ன பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் ஊற்றி மாவுக்கு தேவையான உப்பையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு தோசை மாவை விட கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும். அப்போது தான் ஆப்பம் ஊற்ற சரியாக இருக்கும்.
மீதம் இருக்கும் மாவை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்போது அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து மாவை ஊற்றி ஆப்பத்துக்்கு சுற்றுவது போல சுற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி தட்டு போட்டு மூடி வேக வைத்து விடுங்கள். இந்த ஆப்பத்துக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடும் போது தான் சுவை நன்றாக இருக்கும். இந்த ஆப்பத்துடன் தேங்காய் பால் வைத்து சாப்பிடும் போது ரொம்பவே சுவையாக இருக்கும் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சிக்கன் குழம்பு போன்றவற்றை கூட வைத்து சாப்பிடலாம் பிரமாதமாக இருக்கும்.
டாபிக்ஸ்