Tasty Recipe: மொறுமொறுப்பான சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipe: மொறுமொறுப்பான சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை!

Tasty Recipe: மொறுமொறுப்பான சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை!

I Jayachandran HT Tamil
Jun 04, 2023 01:09 PM IST

மொறுமொறுப்பான சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை
சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை

கிரிஸ்பியான சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி பார்க்கலாம்.

சேனைக்கிழங்கு வறுவல் செய்யத் தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

புளி - சிறு நெல்லிக்காய் அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

மிளகு, சீரகம் தலா - 2 தேக்கரண்டி

சோம்பு, மிளகாய்த் தூள் - தலா 1 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்.

சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை:

சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று கனமான, அகலமான துண்டுகளாக நறுக்குங்கள். இதனை தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். பிறகு நீரை வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள்.

அரைக்கக் கூறியுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

தோசைக் கல்லைச் சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து எடுங்கள். சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.