Tamil NewYear: தமிழ் புத்தாண்டு சிறப்பு சேமியா பாயாசம் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamil Newyear: தமிழ் புத்தாண்டு சிறப்பு சேமியா பாயாசம் செய்முறை

Tamil NewYear: தமிழ் புத்தாண்டு சிறப்பு சேமியா பாயாசம் செய்முறை

I Jayachandran HT Tamil
Apr 13, 2023 08:38 PM IST

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சுவையான சேமியா பாயாசம் செய்முறை குறித்து இங்கு காணலாம்.

சேமியா பாயாசம்
சேமியா பாயாசம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஸ்பெஷலாக சேமியா பாயாசம் செய்து கொண்டாடுங்கள்.

சேமியா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - கால் கப்,

ஜவ்வரிசி -கால் கப்,

சேமியா -கால் கப்,

வெல்லம் – ஒன்னேகால் கப்,

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,

முந்திரி – 10,

உலர்ந்த திராட்சை -10,

ஏலக்காய் பவுடர் -அரை டீஸ்பூன்,

இந்த பாயாசம் செய்வதற்கு முதலில் ஜவ்வரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் குக்கரை வைத்து கால் கப் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்த பின் ஒரு கப் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து சூடானவுடன், சேமியாவை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யும் சேர்த்து சேமியா நன்றாக சிவந்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஊற வைத்த ஜவ்வரிசியும் இதில் சேர்த்து இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி இதை ஒரு புறம் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு பேன் வைத்து வெல்லம் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

இதற்கு பாகுபதம் தேவையில்லை. வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்தால் போதும். இதையும் ஒரு புறம் அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சேமியா, ஜவ்வரிசி இரண்டும் பத்து நிமிடம் வரை கொதித்தால் போதும். அதன் பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த பாசிப்பருப்பை மசித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது ஒரு கொதி வந்த பிறகு கரைத்து வைத்த வெல்லக் கரைசலை வடிகட்டி இதில் ஊற்றிய பிறகு, ஏலக்காய் பொடி சேர்த்து ஐந்து நிமிடம் கை விடாமல் கலந்து கொண்டே இருங்கள்.

இந்த வெல்லக் கரைச்சலுடன் மற்ற அனைத்தும் ஒன்றாக கலந்து வர வேண்டும்.

கடைசியாக அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டி வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து சிவந்து வந்தவுடன், திராட்சையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு பாயாசத்தில் சேர்த்து விடுங்கள்.

சுவையான சேமியா பாயாசம் ரெடி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.