Pirandai Podi: எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை பொடி
பிரண்டை பொடியை இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் பிரண்டை பொடியை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.
பெரும்பாலானோர் இட்லி தோசைக்கு என்ன தான் சட்னி சாம்பார் சேர்த்து சாப்பிட்டாலும் பொடி இருந்தால் தான் திருப்தியாக இருக்கும். அப்படி செய்யும் பொடியை மிக சத்தானதாக மாற்ற சில பொருட்களை வைத்து செய்யலாம். அப்படி ஒரு பொடிதான் எலும்புகளை வலுவாக்கும் பிரண்டை பொடி. அந்த பிரண்டை பொடியை எப்படி பக்குவமாக செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை
உளுந்தம் பருப்பு
கடலை பருப்பு
எள்ளு
உப்பு
சீரகம்
மிளகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
புளி
வெல்லம்
செய்முறை
கையில் எண்ணெய் தொட்டு பிரட்டையை நறுக்கி எடுத்து வேண்டும். பிரண்டையில் உள்ள நரம்பை நீக்கி விட்டு வெயிலில் காய வைக்க வேண்டும்.
நன்றாக காய்ந்த பிரண்டையை வைத்து பொடி செய்து கொள்ளலாம்.
அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் கருப்பு உளுந்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து வாசம் வர ஆரம்பிக்கும் போது அதை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.
அதில் அரை கப் கடலை பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். கடலை பருப்பு சிவந்து வரும் போது அதையும் தட்டிற்கு மாற்றி விட வேண்டும்.
அதே கப்பில் அரை கப் கருப்பு எள்ளை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். எள் பொரிய ஆரம்பித்த பின் அதையும் தட்டிற்கு மாற்றி விட வேண்டும்.
அதில் 10 வர மிளகாய் மற்றும் தேவையான கல் உப்பை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் இரண்டு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் மிளகை சேர்த்து வறுக்க வேண்டும்.
அதில் 50 கிராம் அளவு பெருங்காய கட்டியை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் இரண்டு கப் கறிவேப்பிலையை காய வைத்து அதே கடாயில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நரம்பு நீக்கி காய வைத்த பிரண்டையையும் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
வறுத்து எடுத்த பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியை கொரகொரப்பாக அரைத்து நன்றாக ஆற விட வேண்டும். அந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து நன்றாக மூடி வைத்து விட வேண்டும்.
இந்த பொடியை குறைந்தது 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பிரண்டை பொடியை இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் பிரண்டை பொடியை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்