Naval Pazham Jam : 3 பொருள் போதும்.. ருசியான.. ஆரோக்கியமான நாவல் பழம் ஜாம் செய்யலாம்? இதோ பாருங்கள் ஈஸிதான்!
Naval Pazham Jam : நாவல் பழம் ஜாம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.வாய் முதல் குடல் புண்கள் வரை ஆற்றும் தன்மை கொண்டது.கால்சியம் அதிகம் உள்ளது.உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படும் நாவல் பழம் சர்க்கரை நோய்க்கு சிறந்த எதிரியாக உள்ளது. உடலிலுள்ள இன்சுலின் உணர்திறனை சரிசெய்யும் பணிகளையும், சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் வேலையிலும் நாவல் பழம் ஈடுபடுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தில் எப்படி ஜாம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாவல் பழம் - கால் கிலோ
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
எழுமிச்சை
செய்முறை
முதலில் நாவல் பழம் ஒரு கால் கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு கழுவவும். அதன்பிறகு ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றில் அதில் இந்த நாவல் பழத்தை போடவும். போட்டு நன்கு மூடிவிடுகள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் நாவல்பழம் மேல் உள்ள தோல் தசைப்பகுதி எல்லாம் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். இப்போது அந்த நாவல்பழம் கொட்டயை மட்டும் தனியாக எடுத்துவிடுங்கள்.
பின்னர் அந்த நாவல்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். நைசாக அரைக்கவும். கரடு முரடாக அரைக்க வேண்டாம். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விடவும்.
பாகு பதத்திற்கு வந்த உடன் அதில் அரைத்து வைத்த நாவல் பழத்தை போட்டு நன்கு கலக்கவும். நன்கு சுண்ட விடுகள். ஜாம் பதத்திற்கு வரும். அப்போது அரை எழுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்கள். தற்போது சுவையான நாவல் பழம் ஜாம் ரெடி. வீட்டில் செய்து பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்